'ஐ' சிறப்புக் காட்சியில் பங்கேற்கிறார் சில்வஸ்டர் ஸ்டெல்லோன்!
ஐ படத்தின் சிறப்புக் காட்சியில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டெல்லோன் பங்கேற்கப் போவதாக ஆஸ்கார் பிலிம்ஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாததால் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துவிட்டனர்.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமிஜாக்சன் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தெலுங்கில்
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவை ஹைதராபாதில் நடத்துகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஜாக்கிசானை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

சில்வஸ்டர் ஸ்டெல்லோன்
படத்தின் பிரிமியர் ஷோக்களை வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவில் நடக்கும் காட்சியில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டெல்லோன் கலந்து கொள்கிறார்.

20000 அரங்குகள்
இப்படத்தை உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் 20,000 திரைகளில் வெளியிடப் போவதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











