சிம்பொனி அரங்கேற்றம்.. இளையராஜாவிற்கு தங்கசங்கிலி பரிசளித்த சிவக்குமார்!

சென்னை: இளையராஜா தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததை தொடர்ந்து பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இளையராஜாவின் இந்த சாதனைக்கு பாராட்டி முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், நடிகர் சிவக்குமார் தங்கச்சங்கிலியை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 10000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இந்நிலையில், உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து கடந்த 9ந் தேதி தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.

இசைஞானி இளையராஜா: 'வேலியன்ட்' என பெயரிடப்பட்ட சிம்பொனி இசை நிகழ்ச்சியில் அவர் வழங்கிய இசைக்குறிப்புகளை நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர். சிம்பொனியை இளையராஜா வெறும் 34 நாட்களில் உருவாக்கி இசைப் பிரியர்களுக்கு விருந்துபடைத்துள்ளார் இசையானி இளையராஜா.

ilayaraja symphony concert sivakumar

பாராட்டு விழா: இளையராஜா தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததை தொடர்ந்து பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.. இளையராஜாவின் இந்த சாதனைக்கு பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம் என பதிவிட்டு இருந்தார்.

ilayaraja symphony concert sivakumar
வாழ்த்திய சிவக்குமார்: இந்நிலையில், நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யா மற்றும் பிருந்தாவுடன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பின் போது சிவகுமார் தங்கச்சங்கிலியை இளையராஜாவிற்கு பரிசாக அணிவித்தார். மேலும், சூர்யாவும் பிருந்தாவும் இளையராஜாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். ரஜினிகாந்த், கமல் உள்பட பல்வேறு நடிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிம்பொனியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், செப்டம்பர் 6-இல் பிரான்ஸிலும், அக்டோபர் 6-இல் துபாயிலும் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X