20 வருடத்துக்குப் பிறகு அடுத்த பாகம்... டிபி கஜேந்திரன் ரெடி
சென்னை: இருபது வருடத்துக்குப் பிறகு தனது பட்ஜெட் பத்மநாபன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாக இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் சொன்னார்.
தமிழில், வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் உட்பட பல படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன்.
இப்போது காமெடி உட்பட பல்வேறு கேரக்டர்களில் நடித்துவருகிறார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டி.பி.கஜேந்திரன், தான் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகச் சொன்னார்.

காமெடி படம்
கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கரண், மணிவண்ணன், கோவை சரளா, விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர். காமெடி படமான இது அப்போது நல்ல வரவேற்பை பெற்றது.

விவேக், மணிவண்ணன்
எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். விவேக், மணிவண்ணன், கோவை சரளாவின் காமெடி காட்சிகள் அப்போது பெரிதாக ரசிக்கப்பட்டன.

20 வருடங்களுக்குப் பின்
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார் டி.பி.கஜேந்திரன். இதுபற்றி அவர் கூறும்போது, இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது.

பிரபு நடிக்கிறார்
தெலுங்கு, கன்னடம் மலையாள மொழிகளிலும் ரீமேக் ஆனது. அதுபோன்ற கதைகள் எப்போதும் வெற்றி பெறும். அதனால் இன்றைய காலத்துக்கு ஏற்ப கதையை உருவாக்கி யுள்ளேன். பிரபு நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அடுத்த வருடத்தில் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











