»   »  உயரத்துல கட்டித் தொங்க விட்டா அது 'உறி'.. டிஆர். அடிச்சு இறங்கிப் பாட்டுப் பாடினா அது 'தெறி'...!

உயரத்துல கட்டித் தொங்க விட்டா அது 'உறி'.. டிஆர். அடிச்சு இறங்கிப் பாட்டுப் பாடினா அது 'தெறி'...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி பட ஆடியோ வெளியீட்டின்போது டி.ராஜேந்தர் பேசிய பேச்சின் சூடே இன்னும் போகவில்லை. இந்த நிலையில் அவரை தெறி படத்திற்காக மீண்டும் கூட்டி வந்து விட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். விஜய்யின் தெறி படத்தில் ஒரு பாட்டுக்கு பாட வைத்துள்ளனராம் ராஜேந்தரை.

குத்துப் பாட்டாம்.. அதுவும் செம்ம குத்துப் பாட்டு என்று ஜிவி.பிரகாஷே தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.


சும்மாவே குத்துப் பாட்டு ரேஞ்சுக்குத்தான் இறங்கிப் பாடுவார் டி.ஆர். எனவே இந்தப் பாட்டு ரொம்பவே "தெறி"பிக் ஆக இருக்கும் என்று அஞ்சலாம்.. அதாவது நம்பலாம்...!


டிஆரா.. இல்லை டெர்ரரரா!

டிஆரா.. இல்லை டெர்ரரரா!

சமீபத்திய ஆண்டுகளில் டி.ஆர். பாடி ஹிட் ஆகாத பாடல்கள் என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர் பாடிய அத்தனையும் ஹிட் ஆகியுள்ளன. எல்லாமே டெர்ரர் ஹிட்தான்.


அம்மாடி ஆத்தாடி

அம்மாடி ஆத்தாடி

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாட வந்த டிஆர், மகன் சிம்புவுக்காக பாடிய அம்மாடி ஆத்தாடி பயங்கர ஹிட். பட்டையைக் கிளப்பியது பட்டி தொட்டியெங்கும். அதன் பிறகு அவ்வப்போது பாடத் தொடங்கினார் டி.ஆர்.


எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து

எல்.ஆர். ஈஸ்வரியுடன் இணைந்து

அதன் பிறகு எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒஸ்தி படத்துக்காக கலாசலா பாட்டு. அதுவும் செம ஹிட். படம் ஜல்லி அடித்தாலும் பாட்டு கில்லியாக ஹிட்டானது.


புலிப் பேச்சு

புலிப் பேச்சு

இப்படி பாடி வந்த டி.ஆரைக் கூப்பிட்டு புலி பட ஆடியோவின்போது பேச விட்டனர். நார்மலாக பேச ஆரம்பித்த டிஆர் பி்ன்னர் படிப்படியாக பிட்ச்சைக் கூட்டி பிரித்து மேய்ந்தபோது உலகமே ஒரு விநாடி நின்று பின்னர் ஓடியது.!


விஜய்யே வெட்கப்பட்டுட்டாரே!

விஜய்யே வெட்கப்பட்டுட்டாரே!

டிஆர் பேசப் பேச ஹீரோ விஜய்யே வெட்கப்பட்டுப் போய் கூச்சமாகி, எழுந்து ஓடி டிஆரை கட்டித் தழுவி கன்ட்ரோல் செய்யும் அளவுக்கு இருந்தது டிஆரின் புலிப் பேச்சு.


இப்போ தெறி

இப்போ தெறி

இந்த நிலையில் மறுபடியும் விஜய்க்காக வாய்ஸ் கொடுக்க வந்துள்ளார் டி.ராஜேந்தர். விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தெறி படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளாராம் டி.ஆர்.


செம்ம குத்து

செம்ம குத்து

இந்தப் படத்திற்காக செம்ம குத்துப பாட்டைப் பாடியுள்ளார் டி.ஆர். என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் சிலாகித்துக் கூறியுள்ளார். பாட்டு தெறியாக வந்திருக்கிறதாம்.


என்னா வேகம்!

என்னா வேகம்!

இந்தப் பாடலை ஜஸ்ட் இரண்டே முக்கால் மணி நேரத்தில் பாடி முடித்து விட்டாராம் டிஆர். ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிப்பதிவுக்கூடத்தில்தான் பாடல் பதிவு நடந்ததாம். பதிவின்போது இயக்குநர் அட்லியும் இருந்தாராம்.


அப்ப தெறிப் பேச்சு கன்பர்ம்ட்!

அப்ப தெறிப் பேச்சு கன்பர்ம்ட்!

புலி ஆடியோவிலேயே புல்லரிக்க வைத்தது டிஆரின் பேச்சு. இந்த நிலையில் மார்ச் 20ம் தேதி தெறி ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமாக நடக்கப் போகிறது. அதிலும் டி.ஆர் கலந்து கொண்டு தெறிக்க விடுவார் என்று வெறித்தனமாக நம்பலாம்.!


உயரத்துல கட்டித் தொங்க விட்டா அது உறி.. நீ அடிச்சு இறங்கிப் பாட்டுப் பாடினா அது தெறி... மரத்துல இருந்து விழுந்தா இலை.. நீ பாட்டுப் பாடி கலக்கு தல!
English summary
T Rajendhar has lent his voice to Vijay for his Theri movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil