உயிருக்கு போராடிய நிலையில்.. ரஜினி மட்டும் இல்லைனா? டி ராஜேந்தர் கண்ணீர் பேட்டி!
சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்னை கொண்டன டி. ராஜேந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி, இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு பந்தமா என கேட்க வைத்துள்ளது.
அதில், பேசிய டி ராஜேந்தர் நான் தரையில் அமர்ந்து அண்ணாந்து பார்த்த ஒரே ஒரு ஸ்டார், என் இதயத்தில் என்றும் உதிராத ஸ்டார், என் உதிரத்தை உருக வைக்கும் ஸ்டார், ஒரு சூப்பரான ஸ்டார், அது சூப்பர் ஸ்டார்
என தனக்கே உரிய பாணியில் அடுக்கு மொழியில் பேசி அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தார் டி ராஜேந்தர். தொடர்ந்து பேசிய டி ராஜேந்தர், நான் சினிமாவில் பெரிய ஆள் ஆவதற்கு முன்பே ரயில் பயணங்கள் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டியவர் ரஜினி. நான் பெரிதாக வளராத அந்த காலகட்டத்திலேயே என்னை அழைத்து ஓட்டலுக்கும் அழைத்துச் சென்றவர் ரஜினி. அவர் இருக்கும் இந்த மேடையில் பேசா வாய்ப்பு கொடுத்த பாக்கியராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டி ராஜேந்தர் பேச்சு: நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் இருந்தபோது என்னுடைய மனைவிக்கு அடிக்கடி போன் செய்து, டிஆர் எப்படி இருக்கிறார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் யார் என அடிக்கடி கேட்டு என்னை பற்றி நலம் விசாரித்தவர் லதா அம்மா தான் என்று கண்கலங்கி பேசிய டி ராஜேந்தர். உயிர் உள்ள வரை உஷா திரைப்படத்தில் ரஜினி நடிக்க வேண்டியது. கடைசி நேரத்தில் அது தட்டிப் போய்விட்டது. அந்த படத்திற்கு மட்டும் நான் இசை அமைத்து இருந்தால் இன்றளவும் அந்த இசை கொண்டாடப்பட்டிருக்கும். ரஜினிக்காக அப்படி ஒரு இசையை நான் அமைத்திருப்பேன். அந்த வாய்ப்பு தட்டிப் போனதை நினைத்து நான் பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால், கூலி திரைப்படத்தில் அவருக்காக நான் பாடும் வாய்ப்பை அனிருத் அவர்கள் அமைத்து கொடுத்தார். ஆனால், கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இசை வெளியீட்டு விழாவிற்கு வராத டி ராஜேந்தரை மதித்து அந்த மேடையிலேயே பேசிய பண்பு ரஜினிக்கு மட்டும் தான் உள்ளது அப்படி ஒரு பண்பானவர் ரஜினிகாந்த் என்று டி ராஜேந்திரன் கண்கலங்கி அந்த மேடையில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











