பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்.. சீக்கிரமே சென்னை திரும்புகிறார்.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
சென்னை: சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.
Recommended Video
சில தினங்களுக்கு முன் சென்னையில் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

திடீர் உடல்நலக்குறைவு
எப்போதுமே அடுக்கு மொழியில் அழகுத் தமிழில் பேசி பலரையும் அசத்தக் கூடியவர் டி. ராஜேந்தர். இயக்குநர், நடிகர், அரசியல் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால், மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், நடிகர் சிம்பு அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டார்.

அப்பா தான் முக்கியம்
இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் டி ஆர் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார். சினிமா முக்கியமில்லை, முதலில் எனக்கு என் அப்பா தான் முக்கியம் என சிம்பு அமெரிக்காவுக்கு முன்னதாக சென்று செய்த ஏற்பாடுகளை சென்னை விமான நிலையத்தில் பேசும் போது குறிப்பிட்டு டி ராஜேந்தர் உருக்கமாக பேசிச் சென்றார்.

பூரண குணமடைந்தார்
வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். செப்டம்பர் 15ம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் சமயத்தில் சென்னைக்குத் திரும்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னைக்கு திரும்பிய சிம்பு
இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன் டி ஆர், தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் திரு டி.ராஜேந்தர். அப்பாவை அங்கே விட்டு விட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவருடன் இருக்கும் சிறு வயது போட்டோவை சிம்பு பதிவிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











