கொரோனா பிரச்னை முடிந்ததும் நடிகர் சிம்புவுக்குத் திருமணமா..? டி.ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை
சென்னை: நடிகர் சிம்புக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவரது தந்தை டி.ராஜேந்தரும் அம்மா உஷா ராஜேந்தரும் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்புவின் நண்பரும் நடிகருமான விடிவி கணேஷ் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில், 'சிம்புவின் திருமணத்தை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். விரைவில் அவர் திருமணம் நடக்கும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

லண்டனைச் சேர்ந்தவர்
இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமகள், லண்டனைச் சேர்ந்தவர் என்றும் சிம்புவின் குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர் என்றும் செய்திகள் வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்ததும் அவர் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டன.

மீண்டும் பரபரப்பு
ஏற்கனவே, சிம்புவுக்கும், அவர் உறவினருக்கும் விரைவில் திருமணம் என்று கடந்த ஆண்டு செய்தி வெளியானது. இதை சிம்பு மறுத்திருந்தார். எனக்குத் திருமணம் முடிவு செய்யப் பட்டால் நானே முறையாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரது திருமணச் செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

உஷா ராஜேந்தர்
இந்நிலையில், இந்த செய்தியையும் சிம்புவின் பெற்றோர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் தாய் உஷா ராஜேந்தரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

பொருத்தமான பெண்
சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

இஸ்லாமிய இளைஞர்
நடிகர் சிம்பு, இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











