T Rajendar: திடீரென மயங்கி விழுந்த டி. ராஜேந்தர்.. பதறிப்போன ரசிகர்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் நெல்லையில் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மழை வெள்ள நிவாரண பணிகளை சிம்பு ரசிகர்கள் மன்றம் சார்பாக வழங்க தூத்துக்குடிக்கு சென்ற டி. ராஜேந்தர் திடீரென மயங்கி விழுந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெளிநாட்டில் புத்தாண்டை நடிகர் சிம்பு கொண்டாடி வரும் நிலையில், ஓய்வில் இருந்த தனது தந்தை டி. ராஜேந்தரை விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சொல்லியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்க டி. ராஜேந்தர் சென்ற இடத்தில் தான் டி. ராஜேந்தருக்கு இப்படி ஆகி விட்டது.

நோயில் இருந்து மீண்ட டி. ராஜேந்தர்: உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டுக்கு சென்று டி. ராஜேந்தருக்கு உரிய சிகிச்சை அளித்து நடிகர் சிம்பு தனது தந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார். அதன் பின்னர் அதிகமாக சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் இருந்து வந்த டி. ராஜேந்தர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி: மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டி. ராஜேந்தர். தனது மகன் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரால் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை. வீட்டில் இருந்த என்னிடம் போன் செய்து அப்பா அண்ணன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றே ஆகவேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் காரணமாகவே விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தேன் என்றார்.
தூத்துக்குடியில் நிவாரணம்: நடிகர் விஜய் இன்று நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அதே நேரத்தில் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டி. ராஜேந்தர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திடீர் மயக்கம்: மக்களுக்கு சிரித்த முகத்துடன் நிவாரண பொருட்களை வழங்கி வந்த டி. ராஜேந்தர் திடீரென மயக்கம் போட்டு விழப் பார்த்தார். அவரை நாற்காலியில் அமர வைத்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனடியாக தண்ணீர் தெளித்து காற்று வர வைத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தார். டி. ராஜேந்தர். அவரது வயதை கருத்திக் கொண்டு வீட்டில் ஒய்வெடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











