மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்தவருக்கு, புதுப்பட வாய்ப்பு.. டி.ராஜேந்தரால் கிங்காங் செம ஹேப்பி!
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக வெளீநாட்டில் சிகிச்சைப் பெற்று வந்த டி. ராஜேந்தர் ஓய்வில் இருந்து வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் பாடி ஆடி அசத்தியுள்ளார். நேற்று வெளியான கூலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "சிக்கிடு" லிரிக் வீடியோ இதுவரை 4.3 மில்லியன் வியூஸ் அள்ளி டிரெண்டாகி வருகிறது.
ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான்ஸ் என்றால் இன்னொரு பக்கம் டி. ராஜேந்தர் தனது ஸ்டைலில் தரமான நடனத்தை ஆடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரை தனது மகள் திருமணத்துக்காக அழைக்க சென்ற நடிகர் கிங்காங்கிற்கு புதுப்பட வாய்ப்பையும் டி. ராஜேந்தர் வழங்கிய வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிங்காங் மகள் திருமணம்: வரும் ஜூலை 10ம் தேதி அசோக் பில்லர் அருகே உள்ள பிரம்மாண்டமான MKP திருமண மண்டபத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமணம் நடைபெறுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் கிங்காங். அவரது மூத்த மகள் கல்லூரி படிப்பை படித்து முடித்த நிலையில், வரும் ஜூலை 10ம் தேதி திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள கிங்காங் சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
சிவராஜ்குமாருக்கு அழைப்பு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமாரை சமீபத்தில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்துக்கே சென்று குடும்பத்துடன் அழைப்பிதழை கொடுத்து திருமணத்துக்கு வந்து மகளை ஆசிர்வதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தருக்கு திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கியுள்ளார்.
டி. ராஜேந்தர் கொடுத்த ஆஃபர்: உடல்நலக்குறைவு எல்லாம் சரியாகி மீண்டும் சினிமாவில் களமிறங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் டி. ராஜேந்தர் புதிதாக ஒரு படத்தையும் இயக்கப் போகிறாராம். தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வழங்க வந்த கிங்காங்கை பார்த்து சந்தோஷப்பட்ட டி. ராஜேந்தர், சிறு வயதில் இருந்தே உன்னோட நடிப்பு எனக்குப் பிடிக்கும் ராஜா, இப்போ நான் ஒரு படம் பண்ணப் போறேன், அதில், ஒரு சின்ன கேரக்டர் தருகிறேன், நடிக்கிறியா என்று கேட்டதும், கண்டிப்பா பண்றேன் என மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கச் சென்ற இடத்தில் சிம்பு அப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வந்துவிட்டார் நடிகர் கிங்காங்.


Click it and Unblock the Notifications











