மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் வெளிநாடு பயணம்.. ஷூட்டிங்கை ரத்து செய்தார் சிம்பு!
சென்னை : நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த வார இறுதியில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஆருடன் அவரது மனைவி உஷா, மகன்கள் சிம்பு, குறலரசன், மகள் இலக்கியா ஆகியோரும் வெளிநாடு செல்ல இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் டி.ராஜேந்தர்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென நம் நினைவுக்கு வருவது அடுக்காக அவர் பேசும் வசனம் தான். வாயிலேயே பீட் போடுவது, மேஜையை தட்டி தாளம் போடுவது, தனக்கே உரிய ஸ்டையில் தலையை அசைத்து ஆடுவது டிஆரின் ஸ்பெஷல். இதனால் தான், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார் டி ராஜேந்தர்.

சென்டிமென்ட்
டி ராஜேந்தரின் படங்களில் காதல், தங்கை சென்டிமென்ட், அம்மா சென்டிமேட் என அனைத்தும் சும்மா மாஸாக இருக்கும். டி ராஜேந்தர் கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்த படம் வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து விஜய்சேதுபதி நடித்த கவண் திரைப்படத்தில், பத்திரிக்கை எடிட்டராக நடித்திருந்தார்.

மருத்துவமனையில்
டி ராஜேந்தர் திடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. நான்கு நாட்களான மருத்துவமனையில் இருக்கிறார் ஆனால், ஊடகத்திலோ , சோஷியல் மீடியாவிலோ எந்த ஒரு தகவலும் இல்லாமல், இப்போது மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்வதாக கூறப்படுவதால், என்ன ஆச்சு என்ற கவலையில் ரசிகர்கள் உறைந்தனர்.

சிம்பு அறிக்கை
இதையடுத்து, நடிகர் சிம்பு, ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் என கூறியிருந்தார்.

மேல் சிகிச்சைக்காக
டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட உள்ளார். வரும் 5ந் தேதி முதலில் சிம்பு செல்ல இருப்பதாகவும் பின்னர், குடும்பத்துடன் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு வெளிநாடு செல்ல இருப்பதால் அவர் நடித்து வரும் படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது. டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி பின்னரே படப்பிடிப்பை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











