மனைவி பேசக் கூடாதுன்னு சொல்லிட்டா.. ஆனாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்.. மாஸ் காட்டிய டி.ஆர்!

சென்னை: புலி இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக டி. ராஜேந்தர் அரங்கையே அதிர வைத்த நிலையில், சிம்புவின் பத்து தல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதையும் தாண்டிய பேச்சை பேசி நேரு ஸ்டேடியத்தையே அதகளம் செய்து விட்டார்.

உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

பேசக் கூடாதுன்னு மனைவி சொல்லிட்டான்னு சொல்லி ஆரம்பிச்ச டி. ராஜேந்தர் பத்து தல பத்தி தல தலயாக பேச ஆரம்பித்து கோடி தல வரை போயிட்டார்.

டி ராஜேந்தர் பங்கேற்பு

டி ராஜேந்தர் பங்கேற்பு

உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர் சென்னை திரும்பிய பின்னர் எந்தவொரு கூட்டமான நிகழ்ச்சிக்கும் செல்லாத நிலையில், மகன் சிம்புவின் பத்து தல படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக பங்கேற்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மனைவி பேசக்கூடாதுன்னு சொல்லிட்டா

மனைவி பேசக்கூடாதுன்னு சொல்லிட்டா

மேடை ஏறிய டி. ராஜேந்தர் நிகழ்ச்சிக்கு வந்தா சைலன்ட்டா கீழே உட்கார்ந்துட்டு போயிடுங்க என சொல்லித்தான் அழைத்து வந்தார் உஷா. ஆனால், அவர் பேச்சை மீறும் தந்திரம் என்கிட்ட இருக்கு என சொல்லி உயிருள்ள வரை உஷா என மனைவி பெயரை சொல்லி தனது தடாலடி பேச்சை பேச ஆரம்பித்தார்.

கோடி தல

ஒரு தல என அரங்கில் யாராவது சொன்னாலே அரங்கமே அதிரும். பத்து தல படத்தின் ஆடியோ லாஞ்சின் சிம்பு கற்றுக் கொண்டார் நடித்தலை, ஓடுதலை, ஆடுதலை, பாடுதலை, படைத்தல, ரசிகர்களை மதித்தல, இந்த அரங்கில் என் மகனை காண வந்திருக்கும் பத்தாயிரம் தல, எல்லாத்துக்கும் மேல கோடி தல இந்த படத்தை பார்க்க காத்திருக்கு என சொல்லி மாஸ் காட்டி விட்டார் டி. ராஜேந்தர்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து

ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்தற்கு நன்றி, ஆஸ்கர் வென்ற ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை மிஸ் செய்யக் கூடாதுன்னு தான் வந்தேன் என பேசி அனைவரையுமே சந்தோஷத்தில் ஆழ்த்திய டி. ராஜேந்தர் தனது மனைவி உஷாவுடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மானுடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

சிம்புவுக்கு ஹேப்பி

சிம்புவுக்கு ஹேப்பி

அப்பா பழையபடி வழக்கம் போல ரைமிங்கா, டைமிங்கா பேசுவதை பார்த்தும் கேட்டும் சந்தோஷத்தில் குழந்தையை போல கைதட்டி சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஏ.ஆர். ரஹ்மானும் டி. ராஜேந்தரின் பேச்சுக்கு ரசிகராக மாறி கைதட்ட ஆரம்பித்து விட்டார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சை டி. ராஜேந்தர் நிறைவு செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X