டி.ஆரிடம் கையைக் கொடுத்து மூக்கை உடைத்துக் கொண்ட ‘ஒரு தலை ராகம்’ ரூபா!
சென்னை: நேற்று ஒருதலை ராகம் பட நாயகன் சங்கரின் இயக்கத்தில் உருவான முதல் தமிழ்ப் படமான 'மணல் நகரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஒரு தலை ராகம் படக்குழுவினர் அனைவரும் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார் சங்கர்.
இப்படத்தின் ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட ஒருதலை ராகம் பட நாயகி ரூபா பெற்றுக் கொண்டார்.

தொட்டுப் பேசக் கூடாது
பொதுவாக தனது படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்ற பெண்களைத் தொட்டுப் பேசக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர் டி.ஆர்.

மறந்த ரூபா
அவரது படத்தில் நடித்திருந்தும் கூட 34 வருடங்கள் ஆகி விட்டதால் அதனை மறந்து விட்டார் போலும் ரூபா.

புன்னகைத்துக் கொண்டே கை குலுக்க
மற்றவர்களைப் போலவே மேடை ஏறியதும் டி.ஆரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே கை குலுக்க கையை நீட்டினார்.

பதிலுக்கு வணக்கம்
ஆனால், டி.ஆரோ தனது இரு கைகளையும் கூப்பி பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறினார்.

வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே
இதனால் அதிர்ச்சியடைந்த ரூபா, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே தனது கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











