தேர்தல் நாளில் மும்பையில் ஷூட்டிங்கிற்கு சிம்பு ஏன் சென்றார்? டி ராஜேந்தர் கொடுத்த ’நச்’ பதில்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
ஆனால், பிற மாநிலங்களில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் தமிழ் சினிமா நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், பலரும் இன்னமும் வாக்கு செலுத்த வரவில்லை.
இந்நிலையில், வாக்கு செலுத்த வந்த டி ராஜேந்தரிடம் நமது நிருபர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் சிம்பு
தேர்தல் நாளான இன்று நடிகர் சிம்பு சென்னையில் இல்லாமல் மும்பையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் சிம்பு இன்று வாக்களிக்க வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் சிம்புவின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் தனது வாக்கை செலுத்தி உள்ளார்.

ஓட்டுப் போட்ட டி ராஜேந்தர்
சென்னையில் உள்ள திநகர் இந்தி பிரசார சபை வாக்குச்சாவடி மையத்தில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது நடிகர் சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை? என்கிற கேள்விக்கு டி ராஜேந்தர் நமது நிருபருக்கு அளித்த பிரத்யேக பதில் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சிம்பு வருவார்
தேர்தல் நாளான இன்று மும்பையில் நடிகர் சிம்பு ஏன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் என்கிற கேள்விக்கு டி ராஜேந்தர், நடிகர் சிம்பு நிச்சயம் இன்று மாலை விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்து தனது வாக்கினை செலுத்துவார் என உறுதியளித்துள்ளார். நடிகர் சிம்பு தனது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றுவார் என்கிற செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

மற்ற நடிகர்கள்
நடிகர் சிம்புவை போல நடிகர் அஜித்தும் மும்பையில் தான் உள்ளார். மேலும், நடிகர் தனுஷ் ஹைதரபாத்தில் உள்ளார் எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் காரைக்காலில் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்புவை போலவே மற்ற நடிகர்களும் இன்று மாலைக்குள் சென்னைக்கு திரும்பி தங்களின் வாக்குகளை செலுத்துவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











