டி.ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

By Shankar

சென்னை: இயக்குநரும் திமுக பிரமுகருமான டி ராஜேந்தரின் மகள் இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடக்கிறது.

மணமகன் பெயர் அபிலாஷ் 'பி.டெக்.' பட்டதாரி. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

t rajendar

இலக்கியா-அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10-ந்தேதி காலை 9 மணிக்கு, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு அதே ஓட்டலில் நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X