‘இன்றைய காதல் டா’... டி.ராஜேந்தரின் புதிய படம்.. வில்லியாக நமீதா!

டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்திற்கு ‘இன்றைய காதல் டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளரான டி.ராஜேந்தர் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'இன்றைய காதல் டா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு தாயின் சபதம், என் தங்கைக் கல்யாணி, சம்சார சங்கீதம் உள்பட தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் டி.ராஜேந்தர். தமிழ்ப் பட உலகில் சகலகலா வல்லவர் எனப் பாராட்டப்படும் அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை, சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் லேடி டான் ஆக நடிகை நமீதா நடிக்கிறார். படத்துக்கு 'இன்றையக் காதல் டா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

டி.ராஜேந்தர்:

டி.ராஜேந்தர்:

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது அவர் பேசிகையில், "இப்படத்தில் கதை நாயகனாக நான் (டி.ராஜேந்தர்) நடிக்கிறேன். கதாநாயகர்களாக 2 புதுமுகங்களையும், கதாநாயகிகளாக 2 புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறேன்.

பெண் தாதாவாக நமீதா:

பெண் தாதாவாக நமீதா:

நமீதா வில்லியாக ஒரு பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இதுவரை நடித்திராத வேடம், இது. ராதாரவி, இளவரசன், வெ.ஆ.மூர்த்தி, தியாகு, பாண்டு, வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர், ஜெகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இன்றைய காதல் டா:

இன்றைய காதல் டா:

இது, முழுக்க முழுக்க காதல் கதை. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, டைரக்‌ஷன் ஆகிய பொறுப்புகளை நான் (டி.ராஜேந்தர்) ஏற்றுள்ளேன். படத்தின் இணை தயாரிப்பு: உஷா ராஜேந்தர், பரூக்.

திரைக்கதை அமைக்கும் பணி:

திரைக்கதை அமைக்கும் பணி:

‘கவண்' படத்துக்குப்பின், எனக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், ‘இன்றையக் காதல் டா' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் கவனம் செலுத்தினேன். அந்த பணி நிறைவடைந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டோம்'' எனத் தெரிவித்தார்.

திருமணத்திற்குப் பிறகு:

திருமணத்திற்குப் பிறகு:

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டார் நமீதா. திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது ஆகும். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அவர் நாட்டாமை மாதிரி நடந்து கொண்டு மக்களிடம் அதிக வெறுப்பைச் சந்தித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருக்கும் அவர், லேடி டான் கதாபாத்திரத்தில் வில்லியாக டீஎன்ட்ரீ கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X