twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தரின் சர்ச்சை பேச்சு!

    |

    சென்னை : நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், தமிழ் மற்றும் இந்தியில் எழுதி, இசையமைத்த வந்தே வந்தே மாதரம் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

    இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்திர். இவருக்கு கடந்த ஜூலை மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். சிகிச்சைக்கு பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் வந்தே வந்தே மாதரம் என்ற ஆல்பம் பாடலை பேரனுடன் இணைந்து பாடி உள்ளார்.

    ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!

    டி.ராஜேந்தர்

    டி.ராஜேந்தர்

    பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், என் வாழ்க்கையில் முக்கியமான நாள், என்னடா உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைக்கலாம், உணர்ச்சி வசப்படுபவன் தான் நல்ல உணர்வு உள்ள மனிதன். என்னுடைய முதல் படம் ஒரு தலை ராகத்தில் இருந்து காதல் அழிவதில்லை படம் வரை அனைத்து படத்திற்கும் நான் இசையமைத்து இருக்கிறேன். பல படங்களுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி இருக்கிறேன்.

    டி.ஆர் ரெக்கார்ட்ஸ்

    டி.ஆர் ரெக்கார்ட்ஸ்

    மேலும், டி.ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற இசை நிறுவனத்தின் சார்பில் உருவாக்கி இருக்கிறேன். இதில்,ஆயிரக்கணக்கான டியூன்கள் உள்ளது. இந்த நிறுவனம் எனக்கு மட்டுமில்லாமல், சின்ன சின்ன தயாரிப்பாளர் வேதனையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறேன் என்றார்.

    இந்தி இல்லாமல் வாழ முடியுமா?

    இந்தி இல்லாமல் வாழ முடியுமா?

    தமிழகத்தில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நேரத்தில், வந்தே வந்தே மாதரம் பாடலை தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி ராஜேந்திரன், ரூபாய் நோட்டிலும், ரயிலில் இந்தி இருக்கிறது என்பதற்காக அதில் நாம் யாரும் போகாமல் இல்லை, இந்தி இல்லாமல் வாழ முடியுமா? என்றார்.

    சங்கப்படுத்த வேண்டாம்

    சங்கப்படுத்த வேண்டாம்

    மேலும், அடுத்து தாய்நாட்டுக்காக தமிழ்தேசத்துக்காக ஒரு பாடலை உருவாக்கவிருக்கிறேன் அது என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன் நேரம் வரும் போது நிச்சயம் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, சிம்பு திருமணம் எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, என் குடும்பம் பற்றி கேள்வி கேட்டு என்னை சங்கப்படுத்த வேண்டாம் என்று டி.ஆர்.ராஜேந்தர் பதிலளித்தார்.

    Read more about: song பாடல்
    English summary
    T.Rajendar's Vande Vande Mataram Song Release Ceremony and Press Conference
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X