தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே.. விஜய்க்கு டி. ராஜேந்தர் ஸ்பெஷல் பாராட்டு!

சென்னை: "தெய்வ பலத்திலே, தேர்தல் களத்திலே, முதல் முயற்சியிலேயே வெற்றிப்படி கட்டு, அதை எட்டு என்று எட்டிப் பிடித்திருக்கும் தொகுதிகளோ நூற்றெட்டு (108) வெற்றிக்கனியை தட்டி பறித்திருக்கும் நண்பர் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன்.

வெற்றி திலகமிட்டு அவரோடு தோளோடு தோள் நின்று, துணிவு கொண்டு, வெற்றி கண்டு இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே நேரத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய இருக்க கூடிய மற்ற கட்சி வெற்றி உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர்கள் தோல்வியிலே துவளாதீர்கள். மனம் தளராதீர்கள். காலம் வரும் காத்திருங்கள் என்று அவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..." என டி. ராஜேந்தர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

T Rajendar send super wishes for Vijay s Great Victory in his Debut Election

ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு சப்போர்ட் செய்து வந்தார் டி. ராஜேந்தர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தேர்தல் நாள் அன்று டி. ராஜேந்தரின் மகன் சிம்புவும் வெள்ளை சட்டை, சந்தனக் கலர் ஃபேண்ட் போட்டு வந்து இருந்ததை பார்த்ததும் பலரும் அவரிடம் கேள்வி எழுப்ப சமாளித்து விட்டார்.

விஜய் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில், சிம்புவும் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ், ரவி மோகன், ஜீவா, சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட சினிமா நடிகர்கள் விஜய்யின் வெற்றியை மனதார வாழ்த்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட டாப் நடிகர்களும் விஜய்யின் முயற்சிக்கும் முதல் முறை தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பெரும் சாதனையை படைத்த நிலையில், பாராட்டி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X