twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்த போகாத டிஆர்...ஏன்னு அவரே சொன்ன காரணம்

    |

    சென்னை : பிரபல பின்னணி பாடர் எஸ்பிபி கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொரோனா நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட ஒரு மாத கால போராட்டத்திற்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பிபி.

    Recommended Video

    பாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்

    T.Rajendar shared why he didnt pay last respect to SPB

    அதைத் தொடர்ந்து கொரோனாவால் ஏற்பட்ட உடல் பாதிப்புக்களால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25 ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து திருவான்மயூரில் உள்ள அவரின் பண்ணை வீட்டில், எஸ்பிபி.,யில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    எஸ்பிபி.,யில் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகினர் சார்பில் பல்வேறு இடங்களில் எஸ்பிபி.,க்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கேரளாவில் எஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எஸ்பிபி.,யின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டது.

    சின்னத்தம்பி 2 படத்தை பி. வாசு இயக்கலாம்னு ட்வீட் போட்ட ரசிகர்.. குஷ்புவோட ரியாக்‌ஷனை பாருங்க?சின்னத்தம்பி 2 படத்தை பி. வாசு இயக்கலாம்னு ட்வீட் போட்ட ரசிகர்.. குஷ்புவோட ரியாக்‌ஷனை பாருங்க?

    கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி.,யுடன் எடுத்துக் கொண்ட இரண்டு பழைய ஃபோட்டோக்களை பகிர்ந்து, இசைக்காக தன்னை அற்பணித்துக் கொண்ட எஸ்பிபி குரலாகவே மாறி விட்டார். சரிரீரத்தை விட்ட அவர் சாரீரமாக அனைவரின் மனதிலும் உலவிக் கொண்டிருக்கிறார் என மிக உருக்கமாக கருத்து பதிவிட்டிருந்தார்.

    திரையுலக இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்தில் இளையராஜாவும் எஸ்பிபி பற்றி மிக உருக்கமாக பேசினார். அப்படி சென்னையில் நடந்த எஸ்பிபி நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரபல டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் மிக உருக்கமாக பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

    கூட்டத்தில் அவர் பேசுகையில்,வாசமில்லா மலரிது பாடலை என்னிடம் பாடி காட்டினார். வாசமில்லா மலரிது பாடலை பாடிய மிக அற்புதமாக பாடிய அந்த பாச மலருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர் இறந்த அன்று கூட அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த போகல. ஏன்னா, அவர் பாடும் போது கண்மூடி பாடி பார்த்திருக்கேன். ஆனா, அவர் வாய்மூடி பார்த்ததில்லை. அப்படி அவர் வாய்மூடி கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. என் மனதில் மட்டுமல்ல, ரசிகர்கள் அத்தனை பேரின் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்றார் உருக்கமாக.

    சோஷியல் மீடியாவில் வெளியான டி.ஆர்., பேசிய வீடியோ அனைவரையும் உருக வைத்துள்ளது. இதனை பலரும் லைக் செய்து வருகிறார்கள்.

    English summary
    T.Rajendar spoke in SPB's first year death anniversary function in chennai.The video of TR speaking on social media has melted everyone. Many people are liking this. T.Rajender, who spoke very eloquently about SBP has impressed everyone.He shared that why he didn't pay last respect to spb
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X