T.Rajendar - சோத்துக்கு தாளம் போட மாட்டேன்.. தாளம்தான் சோறு போடும்.. டி.ராஜேந்தர் சொன்ன அதிரடி பதில்

சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) சோத்துக்கு தாளம்தான் போடணும் என சொன்ன ஆசிரியரிடம் டி.ராஜேந்தர் கொடுத்த அசத்தல் பதில் குறித்து தெரியவந்திருக்கிறது.

ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ராஜேந்தர் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பது என எந்த ஜானரிலும் கில்லியாக இருப்பவர். குறிப்பாக இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு படத்துக்கூட அவரிடம் செல்லாமல் தானே இசையமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் டி.ராஜேந்தர்.

T.Rajendar Speaks in Naan Kadaisivarai Thamizhan Movie Function

சிம்புவை செதுக்கிய உளி: தன்னை போலவே தன்னுடைய மகனையும் உருவாக்க நினைத்தார். அதன் காரணமாக சிறு வயதிலிருந்தே சிம்புவை கேமரா முன்பு நிறுத்தி அதகளம் செய்தவர். சிம்புவின் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியிலும் ராஜேந்தரின் பங்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. அதன் காரணமாகத்தான் சிம்புவால் சிறு வயதிலேயே நடிக்க முடிந்தது, இளம் வயதிலேயே படத்தை இயக்க முடிந்தது, இசையமைக்க முடிந்தது, பாடல் எழுந்த முடிந்தது

என்ன ஆனாலும் டி.ஆர்தான்: சினிமாவின் காலகட்டம் மாறும்போது பலரும் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ அப்படி இல்லை. தற்போதைய தலைமுறை சினிமா மாறிக்கொண்டிருந்த ஆர்மபக்கட்டத்தில் வீராசாமி என்ற படத்தை இயக்கினார். ஏன் சமீபத்தில்கூட சந்தானத்திடம் ஒரு கதை யோசித்திருக்கிறேன் நீ நடிகர் சந்தானமாகவே நடி என அவர் சொன்னதாக சந்தானமே தெரிவித்திருந்தார்.

இசையமைப்பாளர்: டி.ராஜேந்தர் அவர் இயக்கும் படத்துக்கு அவரே இசையமைத்திருக்கிறார். அப்படி அவர் இசையமைத்த பாடல்களும் ஹிட்டடித்தவை. தற்போது நான் கடைசி வரை தமிழன் என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படம் 163 மொழிகளில் உருவாகிறது. படத்தை எம். ராஜேந்தர் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் விழாவில் பேசியபோது டி.ராஜேந்தர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

டி.ராஜேந்தர் பேச்சு: "இந்தப் படம் 163 மொழிகளில் உருவாக்குவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் எம்.ஏ.ராஜேந்திரன். அவருக்கு எனது பாராட்டுக்கள். இங்கு நான் வருவதற்கு காரணம் இறைவன் மட்டும்தான். நேற்று இரவு வரை ஹைதராபாத்தில் இருந்தேன். ராஜேந்திரன் என்ற பெயரில் திறன் என்பதை நான் பார்க்கிறேன். இந்தப் படத்துக்கு இசையமைக்க காரணம் டைட்டில் மட்டும்தான்.

தாளம்: பன்னாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசையமைப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். ஒரு படத்துக்கு வசூலை இசையும் ஈட்டிக்கொடுக்கும். இதற்கு உதாரணம் நானும் எனக்கு முன்னால் இருந்த கலைஞர்களும்தான். கலையும், ஞானமும் இல்லாமல் சினிமாவில் இருக்க முடியாது. பள்ளியில் தாளம் போடும்போது எனது ஆசிரியர் என்னிடம், 'சோத்துக்கு தாளம்தான் போட போறனு சொன்னார். நான் உடனே, சோத்துக்கு தாளம் போடமாட்டேன் நான் போடும் தாளம்தான் சோறு போடும் என்று சொன்னேன்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X