twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி.. தமிழக முதல்வருக்கு டி.ராஜேந்தர் நன்றி!

    By
    |

    சென்னை: தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்ததை அடுத்து தமிழக முதல் அமைச்சருக்கு டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட இந்த ஊரடங்கை அடுத்து, வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உட்பட பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

    அனுமதி அளிக்கவில்லை

    அனுமதி அளிக்கவில்லை

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தியேட்டர்களை திறக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. இருந்தும் தமிழகம் உட்பட சில மாநிலங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதற்கிடையே, தமிழகத்தில் ஊரடங்கை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    தியேட்டர்களை திறக்க

    தியேட்டர்களை திறக்க

    மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    டி.ராஜேந்தர் நன்றி

    டி.ராஜேந்தர் நன்றி

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரும் இயக்குனருமான டி.ராஜேந்தரும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி. திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி. திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    திரையரங்குகளை நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன இயங்க அனுமதி வழங்கி திரைத்துரையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும், அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Tamil Nadu government on Saturday announced that Movie theatres will reopen on November 10. Director T.Rajendar thanks Tamilnadu CM and Ministers for that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X