கண்ணீரில் கரையவைத்த காதல் கதை.. ஒரு தலைராகம் பட நடிகை ரூபா எப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை: டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஒருதலை ராகம். இப்படம் தமிழகத்தில் அந்த காலத்தில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த நடிகை ரூபா, இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா?
1980 ம் ஆண்டு டி ராஜேந்திரன் எழுதி,இயக்கிய திரைப்படம் ஒரு தலை ராகம், இந்த படத் ஈஎம் இப்ராஹிம் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே புதுமுகம் தான். கல்லூரி மாணவர்கள் என்றால் சூட்கோட் போட்டுக்கொண்டு மெத்தபடித்த மேதாவித் தனத்துடன் இருப்பார்கள் என்ற இலக்கை உடைத்த திரைப்படம் இதுவாகும்.

ஒரு தலை ராகம்: அதுவரை திரையரங்குக்கு கூட்டம் கூட்டமா வராத கல்லூரிமாணவிகள் கூட இந்த படத்தை தியேட்டரில் வந்து ரசித்தனர். அதற்கு காரணம் கல்லூரி வாழ்க்கையும், காதலும் தான். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தியேட்டர்களுக்கு அழைத்து வந்தது இந்த படம். திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து இந்த படம்.

உணர்வு பூர்வமான கதை: இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், ஒன் சைடு லவ் அவ்வளவுதான். ஆனால், டி ராஜேந்திரன் அழுத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லி இருப்பார். வசதியான குடும்பத்தை சேர்ந்த ராஜா, தன்னுடன் படிக்கும் சுபத்ராவை காதலிக்கிறார். சுபத்ரா ராஜாவின் மீது காதல் இருந்தாலும் அதை மூடிமறைந்துக் கொள்கிறாள். அதற்கு காரணம், சுபத்ராவின் அப்பா சிறு வயதிலேயே இரண்டு மகன்களையும் மனைவியையும் விட்டு சென்றதுதான்.

படத்தின் கதை: இதனால் சுபத்ராவின் அம்மா கஷ்டப்பட்டு மகள்களை வளர்த்தார். அது மட்டும் இல்லாமல் தன்னை போல் தன் மகள்களும் ஏமாந்து விடக்கூடாது என்று சுபத்ராவின் அம்மா சொல்லி சொல்லி வளர்க்கிறார். இதனால் சுபத்ராவுக்கு ராஜா மீது காதல் இருந்தாலும் அதை மனதில் பூட்டி வைக்கிறாள். ஒரு கட்டத்தில் ராஜா தனது காதலை சொல்ல,சுபத்திர மறுத்துவிடுகிறாள். இதையடுத்து, மன வேதனையில் இருந்த ராஜா சுபத்ரா காதலை சொலல வரும் நேரத்தில் இறந்து விடுகிறார். இந்த படம் சோகத்தில் முடிந்தாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் இன்று வரை அனைவரும் ரசித்து கேட்டுகும் பாடலாக உள்ளது.

ரூபா இது: இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரூபா, இந்த படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் 15 படங்களில் அடித்தார். அதன் பிறகு, பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ராமராஜன் தங்கையாக நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டாத இவர்,கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த டான்சர் ஆவர். இவர் கன்னத்தில் பல திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது, நடிகை ரூபாயின் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது அதைப்பார்த்த பலர் ரூபா இவர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











