ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...- டிஆரின் 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' பாட்டு இது!

By Shankar

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் டி ராஜேந்தர்.

ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது... எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு விஜய் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "சிக்கிக்கு சிக்கிக்கிச்சு" என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

மிருதுளா

மிருதுளா

இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.

வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.

மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோபால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

என்.எஸ். ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் பெஞ்சமின் இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - என்.ராஜேஷ்குமார்.

90 சதவீதம் ரயிலில் ஷூட்டிங்

90 சதவீதம் ரயிலில் ஷூட்டிங்

படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமார் கூறுகையில், "இதுவரை டிரெயினில் படமாக்கப் பட்ட எல்லா படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த படங்களெல்லாம் ஒரு பாடல், அல்லது சண்டை காட்சிகள் இல்லையென்றால் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் 90 % காட்சிகள் மற்றும் பாட்டு,பைட் என எல்லாமே ரயில் தான் படமாக்கி இருக்கிறோம்.

டிஆர் பாட்டு

டிஆர் பாட்டு

இந்தப் படத்தில் டி.ஆர்.பாடிய "ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது" என்ற பாடல் காட்சி ஹைதராபாத்தில் பார் செட் போட்டு மிதுன், ஆதவன் மற்றும் 30 நடன கலைஞர்கள் பங்கேற்க படமாக்கப் பட்டது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது சிக்கிக்கு சிக்கிக்கிச்சு.

விஜய் சேதுபதி ரூம்மேட்

விஜய் சேதுபதி ரூம்மேட்

நாளைய இயக்குனர் போட்டியில் கலந்துகொண்டு வென்று இயக்குனராகி இருக்கிறேன். துபாயில் உள்ள ஏர்லைன்ஸ் ஒன்றில் பணியற்றிக்கொண்டே இயக்குனரானேன். இன்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி முன்பு துபாயில் வேலை செய்தவர். அவரும் நானும் ரூம் மேட்ஸ். இன்று அவர் நடிகராக வெற்றி பெற்றிருக்கிறார் எனும் போது சந்தோஷமாக இருக்கு," என்றார் என்.ராஜேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X