'இன்றைய காதல் டா' அவ்ளோதானா? அடுத்த படத்தில் இசைக் கலைஞர் ஆகிறார் டி.ராஜேந்தர்
சென்னை: அடுத்து தான் இயக்கி நடிக்கும் படத்தில் இசைக் கலைஞராக நடிக்க உள்ளார் டி.ராஜேந்தர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு வீராசாமி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் டி.ராஜேந்தர். இதில் மும்தாஜ், மேக்னா நாயுடு ஆகியோர் நடித்திருந்தனர்.
இதற்குப் பின் படம் இயக்காமல் இருந்த டி.ராஜேந்தர், கடந்த சில வருடங்களுக்கு முன் இன்றைய காதல் டா என்ற படத்தை இயக்கி நடிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

நமிதா ஹீரோயின்
இதில் நடிகை நமிதா ஹீரோயினாக நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என அனைத்தையும் அவரே கவனிப்பதாகவும் கூறியிருந்தார்.

3 மொழிகளில்
தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் இதைத் தயாரிக்க இருப்பதாகவும் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருப்பதாகவும் சொன்னார். ஆனால், அதன்பிறகு அந்த படம் தொடங்கப் படவில்லை.

மீண்டும் இயக்கம்
இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தில் உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞரைப் பற்றிய கதையான இதில், இசைக் கலைஞராக டி.ராஜேந்தரே நடிக்க இருக்கிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ்
அவர் ஜோடியாக, நடிகை நமீதா நடிக்க இருக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











