பாரதிராஜாவும் நானும் அடம் பிடித்தோம் .. டி.ராஜேந்திரன் பேச்சு

Recommended Video

T. Rajendran Champion Audio Launch | Suseenthiran

zசென்னை: தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று பாரதிராஜாவும் நானும் அடம் பிடித்தோம். அதற்காக நாங்க பட்ட பாடு அப்பாடா என்று சாம்பியன் இசைவெளியீட்டுவிழாவில் டி. ராஜேந்திரன் பேசினார்.

சாம்பியன் ஆங்கிலப் பெயர் தான் இருந்தாலும் பரவா இல்லை இனி வரும் தலைமுறை பிழைத்துக்கொள்ளட்டும் என்றார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "சாம்பியன்"திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரைநட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

T. Rajendran speaking at the Champion Music Release Function

இதில் பேசிய டி.ராஜேந்திரன், நான் சமீபகாலமாக எந்த ஒரு ஒலி நாடா விழாவிலும் கலந்து கொள்வதில்லை. ஒதுங்கினால் ஓய்வெடுப்பதற்கு பதுங்கினால் பாய்வதற்கு என்று இருந்தேன். விஷ்வாவை விஷ் பண்ண வா வென அன்பால் என்னை சுரேஸ் அழைத்தார். அதனால் அவரை வாழ்த்த வந்தேன் என்றார்.

தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன். தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும் அடே அப்பா, இனி வரும் தலைமுறையாவது பிழைத்து போகட்டும் என்றார். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய பாரதிராஜா, சுசீந்தரன் எனக்கு மிகவும் பிடித்த கலைஞன் பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க
ஒத்துக்கல, இப்பபோய் ஏன்பா நடிச்சுகிட்டுனு நினைச்சேன் ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும் அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல அவன பார்த்தே சொல்லிடலாம். இந்தபடம் இருக்கும்னு, அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X