தமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என்றவர்களை காணோம்: விஷாலை விளாசிய தயாரிப்பாளர்

By Siva

சென்னை: தமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என்றவர்களை காணோம் என்று தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார்.

யோகிபாபு, சாம், ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் டி. சிவா விஷாலை விளாசினார்.

தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பேன் என்று சபதம் எடுத்துவிட்டு அந்த பொறுப்பை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு நைசாக எஸ்கேப் ஆனார் விஷால். இந்நிலையில் இது குறித்து சிவா கூறியதாவது,

அரசு

அரசு

புக் மை ஷோவுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது இல்லை. போய் கேட்டாலே செய்து கொடுக்கும் அரசாங்கம் இங்கு உள்ளது. ஆனால் போய் கேட்கக்கூடிய தலைமை இல்லை. எதிர்த்து குரல் கொடுப்பவர் போய் கோரிக்கை விடுக்க முடியாது.

அனாதைகள்

அனாதைகள்

யாரை அழைத்துக் கொண்டு போய் பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதைகள் போன்று நிற்கிறோம். எங்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு இடம் இல்லை. 3, 4 மாதங்களில் இந்த நிலைமை மாறும். இந்த புக் மை ஷோ விவகாரத்திற்கு உறுதியான முடிவு எட்டப்படும். அதை நான் உறுதியாக கூறுகிறேன்.

விஷால்

விஷால்

எதையும் முயற்சி செய்யாத ஒரு அமைப்பு, எதை பற்றியும் கவலைப்படாத ஒரு தலைவர். ப்ரொஃபஷனலாக தயாரிப்பாளராக இருப்பவர் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும். படம் தயாரித்த அனைவரும் தயாரிப்பாளர் இல்லை. தன்னை நடிக்க வைத்து, தானே தயாரிப்பவர் எல்லாம் தயாரிப்பாளர் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அப்படிப்பட்ட ஒருவரை தலைவராக்கியது தான் இந்த சீரழிவுக்கு காரணம்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கணும் என்றால் வேறு எங்காவது சென்று செய்யணும். இந்த அமைப்பில் இருந்து செய்யக் கூடாது. தமிழ் ராக்கர்ஸை 6 மாசத்துல, ஒரு மாசத்துல, 2 வாரத்துல ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் காணோம். முறையில்லாத நிர்வாகம் உள்ளது என்று டி. சிவா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X