இரண்டு படங்களுடன் மோத தயாராகும் டாணா… ஜனவரியில் ரிலீஸ்
சென்னை : வைபவ் போலீசாக நடித்துள்ள படம் தான் டாணா, இப்படம் ஜனவரி யில் வெளிவர உள்ளது. ஜிப்ஸி , ராஜாவுக்கு செக் போன்ற படங்களும் ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில் இப்படங்களுடன் மோத டாணா தயாராகிவிட்டது.
டாணா என்பதற்கு தமிழ்நாடு போலீஸ் என்று அற்தமாம். வைபவ் போலீஸாக ஏற்கனவே லாக்கப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இந்த படத்திலும் போலீஸாக நடித்திருக்கிறார்.

போலீஸ் குடும்பத்தில் பிறக்கும் வைபவ் ஒருவிதமான நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதாவது, பயம், பதற்றம், கோவம் என எது நடந்தாலும், இவரின் குரல் பெண் குரலாக மாறிவிடுமாம் இதுதான் இந்த படத்தின் ஹைலைட் காமெடி. வைபவ், சிக்சர் படத்தில் மாலைக்கண் நோயாளியாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார். இதைத்தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக வந்துள்ள டாணாவும் அதே போல அமைந்துள்ளது.
யுவராஜ் சுப்ரமணி இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். எம்.பி கலைமாமணி தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார்.

பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் மற்றும் சிவாவின் சுமோ வெளியாகுகிறது. இதனால், அடுத்து அடுத்து படங்கள் வரிசையில் நிற்கின்றன. அதில் ஜிப்ஸி, ராஜாவுக்கு செக் இந்த வரிசையில் இப்போது டாணாவும் சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











