கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கும் பிரபல நடிகை!
சென்னை: நடிகை டாப்ஸி கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பல திரைப்படத்தில் நடித்து, தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் டாப்சி. தற்போது "நேர்கொண்ட பார்வை" என்ற படத்தில் நம்ம "தல"
கூட நடித்து மிகவும் பிரபலம் ஆனார். இப்போது மறுபடியும் ஒரு சேலஞ்சிங் ரோலில் நடிக்க உள்ளார். "கிரிக்கெட்டர் வேடம் "தான் அது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், 203 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6720 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ள இவர் அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை டாப்சி நடிக்கவுள்ளார்.
இதற்காக மிதாலி ராஜின் கிரிக்கெட் விளையாடிய போட்டிகளின் வீடியோவை பார்த்து, டாப்சி தயாராகி வருகிறார்.
இப்படம் டாப்சி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமைய பில்மிபீட் தமிழின் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











