»   »  இனி அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்: உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி

இனி அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்: உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொலைக்கட்சியில் உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி

மும்பை: ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க மாட்டேன் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்த ஜுட்வா 2 படத்தில் டாப்ஸியும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

டாப்ஸியும், தயாரிப்பாளரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஜாக்குலின் தெரிவித்தார்.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

டாப்ஸி அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இனி எந்த நடிகையுடன் சேர்ந்து மீண்டும் நடிக்கவே மாட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. டாப்ஸி யோசித்துவிட்டு ஜாக்குலின் பெயரை கூறினார்.

காரணம்

காரணம்

ஜாக்குலினா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்த டாப்ஸி, நாங்கள் ஏற்கனவே சேர்ந்து நடித்துவிட்டோம். அவர் தனது உடலை சிக்கென்று வைத்திருப்பதை பார்த்து பொறாமையாக உள்ளது என்றார்.

கோபம்

கோபம்

டாப்ஸி தயாரிப்பாளருக்கு நெருக்கமாக இருப்பதால் அவருக்கு தன்னை விட முக்கியத்துவம் கொடுப்பதாக நினைத்து ஜாக்குலின் கோபம் அடைந்தார் என்று முன்பு செய்திகள் வெளியாகின.

காதலி

காதலி

ஜுட்வா 2 படத்தில் நடித்தபோது வருண் தவானுக்கும், டாப்ஸிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் இதை பார்த்து அவரின் காதலி கோபம் அடைந்ததாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

English summary
Taapsee Pannu and Jacqueline Fernandez shared screen space for the first time in Varun Dhawan starrer Judwaa 2. Back then there were strong whispers about the two actresses sharing cold vibes though they had later laughed off these reports. Meanwhile for folks, who have been eagerly waiting for the two actresses to reunite on-screen, here's some bad news.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil