'பி' கிரேட் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்.. டாப்ஸியை வம்படியாக சண்டையிழுத்த கங்கனாவின் சகோதரி!

சென்னை: நடிகை டாப்ஸியை பி கிரேட் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என கூறி வம்பிழுத்துள்ளார்.

Recommended Video

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதையில் டாப்ஸி-வீடியோ

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் கங்கனா.

இவருக்கும் நடிகை டாப்ஸிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வார்த்தை போர்

வார்த்தை போர்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்ஸிக்கும் சக நடிகையான கங்கனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே வார்த்தை போர் நிலவி வருகிறது.

காப்பியடிக்கிறார்

காப்பியடிக்கிறார்

கங்கனாவை விடவும் கங்கனாவின் சகோதரி ரங்கோலிக்கும் டாப்ஸிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கனாவை பார்த்துதான் டாப்ஸி காப்பியடிக்கிறார் என குற்றம்சாட்டினார் ரங்கோலி.

மோடி கருத்து

மோடி கருத்து

நடிகை டாப்ஸிக்கு ஆதரவாக பேசியதற்காக இயக்குநர் அனுராக் காஷ்யப்பை கடுமையாக விமர்சித்தார் கங்கனாவின் சகோதரி ரங்கோலி. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட வீடியோ மெஸேஜில் நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் அகல் விளக்குகள் ஏற்றுமாறு கூறினார்.

புது டாஸ்க் வந்தாச்சு

புது டாஸ்க் வந்தாச்சு

இதனைக் கேட்ட டாப்ஸி புது டாஸ்க் வந்தாச்சு.. ஏ..ஏ.. ஏய்! என மோடியை கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். டாப்ஸியின் டிவிட்டை பார்த்த ரங்கோலி சண்டால், டாப்ஸியின் டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ளார்.

மிமிக்ரி நடிகை

மேலும் பி கிரேட் மிம்மிக்ரி நடிகைகள் ஏன் இதற்காக சூடாக வேண்டும்.. இது சிம்பிளான டாஸ்க்தானே என கேட்டு டாப்ஸியை வெறுப்பேற்றியிருக்கிறார். ஏற்கனவே டாப்ஸி ஹேர் ஸ்டைல் முதல் டிரெஸ் வரை அனைத்திலும் தனது சகோதரியைதான் காப்பிடியாக்கிறார் என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: taapsee டாப்ஸி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X