அப்படியே எங்க அக்காவ காப்பியடிக்கிறா.. டாப்ஸியை பிராண்டிய பிரபல நடிகையின் தங்கை!

மும்பை: நடிகை டாப்ஸி அப்படியே தனது அக்காவை காப்பியடிப்பதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தங்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகை கங்கனாவுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கே தற்போத நேரம் சரியில்லை போலும். தொடர்ந்து கண்டபேடி பேசி ஒருவர் மாறி ஒருவர் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜட்ஜ்மெண்டல் ஹை கியா' திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கங்கனா.

கேவலப்படுத்திய கங்கனா

கேவலப்படுத்திய கங்கனா

மேலும் பத்திரிக்கையாளர்கள் 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் அலைகிறார்கள் என கேவலமாக பேசினார். இதனால் அவர் தொடர்பான செய்திகளை புறக்கணிக்க போவதாக பத்திரிக்கையாளர்கள் அறிவித்தனர்.

அக்காவை காப்பியடிக்கிறா

அக்காவை காப்பியடிக்கிறா

இந்நிலையில் நடிகை டாப்சி மீது பாய்ந்து பிராண்டியுள்ளார் கங்கனாவின் தங்கை ரங்கோலி. நடிகை டாப்சி அப்படியே அப்பட்டமாக தனது அக்காவை காப்பியடியப்பதாக கூறினார்.

டாப்சிக்கு ஒரிஜினாலிட்டி இல்லை

டாப்சிக்கு ஒரிஜினாலிட்டி இல்லை

நடிகை டாப்சிக்கு என்று ஒரிஜினாலிட்டி எதுவும் இல்லை. தனது அக்காவை அச்சு அசலாக மிமிக்ரி செய்வதாகவும் ரங்கோலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறைந்த சம்பளம்

குறைந்த சம்பளம்

தனது அக்காவை விட டாப்சிக்கு அதிக படங்கள் கிடைப்பதற்கு காரணம் அவர் மிகக்குறைந்த சம்பளம் வாங்குவதுதான் என்றும் வாய்க்கு வந்தபடி திட்டி கோபத்தை தீர்த்திருக்கிறார் ரங்கோலி.

கடுப்பான ரங்கோலி

கடுப்பான ரங்கோலி

அண்மையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த டாப்சி, கங்கனாவை மறைமுகமாக விளாசியிருக்கிறார். இதனால் கடுப்பான கங்கனாவின் தங்கை ரங்கோலி, டாப்சியை திட்டி தாம் தூம் என குதித்திருக்கிறார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

அக்காவின் சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள் தங்கை டாப்சியை இப்படி வறுத்தெடுத்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப் ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X