'அந்த' விஷயத்தில் நான் சரியான வெட்கம் கெட்டவள்: டாப்ஸி ஓபன் டாக்
Recommended Video

மும்பை: அந்த விஷயத்தில் நான் வெட்கம் கெட்டவள் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
டாப்ஸி தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகையாகிவிட்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்றால் இயக்குனர்களின் நினைவுக்கு வரும் நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் சக நடிகர்கள் பற்றி டாப்ஸி கூறியிருப்பதாவது,

சக நடிகர்
படப்பிடிப்புக்கு சென்றால் முதல் நாளே சக நடிகருடன் பேசிப் பழகுவது எனக்கு முக்கியம். அவர்களுடன் நன்றாக பேசிப் பழகினால் தான் என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.

பழகுவோம்
சக நடிகர்களிடம் தானாக சென்று பேசிப் பழகும் விஷயத்தில் எனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை. சக கலைஞர்கள் நிஜத்தில் நன்றாக பேசிப் பழகினால் தான் திரையில் நடிக்கும்போது சவுகரியமாக இருக்கும்.

கடந்த காலம்
நான் கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை. ஒரு படத்தின் முடிவை பார்த்தே என் அடுத்த படத்தை தேர்வு செய்கிறேன்.

வித்தியாசம்
நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க இஷ்டம் இல்லை. கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்கிறார் டாப்ஸி.


Click it and Unblock the Notifications











