சொல்லவே இல்லை.. காதலருடன் மாலத்தீவில் டாப்ஸி போட்ட செல்ல டான்ஸ்.. வைரலாகும் போட்டோ, வீடியோ!
சென்னை: நடிகை டாப்ஸி, தனது காதலருடன் டான்ஸ் ஆடிய போட்டோவும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த பலருக்கு கொரோனா கொடுத்திருக்கிறது ஓய்வு.
அந்த பிசி நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. இப்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார். வெகேஷனாம்.

மதியாஸ் போவுடன்
கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள வலைக்கட்டிலில், பிகினி உடையில் அமர்ந்தபடி அவர் வெளியிட்டிருந்த போட்டோவும் வைரலானது. லட்சக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்திருந்தனர். நடிகை டாப்ஸி வெளிநாட்டு பேட்மின்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.

காதலர் மதியாஸ்
இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருந்த அவர், கொரோனா லாக்டவுன் நேரத்தில் அதை வெளிப்படுத்தினார். தனது குடும்பத்தினரும் அவர் காதலை ஏற்றுக் கொண்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் டாப்ஸியுடன் அவர் காதலர் மதியாஸும் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.

நீர் தாவரங்கள்
அங்கு டாப்ஸியுடன் கடலில் குதித்து அதற்கு அடியில் சென்று நீர்தாவரங்களைச் சுற்றிப் பார்க்கும் வீடியோவை டாப்ஸி வெளியிட்டுள்ளார். டாப்ஸியுடன் செல்லமாக டான்ஸ் போடும் மதியாஸ், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை டாப்ஸி தனது பக்கத்தில் பதிவு செய்யவில்லை. அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

பிக்கினி ஷூட் வீடியோ
இதற்கிடையே, டாப்ஸி, அவர் சகோதரிகள், மதியாஸ் ஆகியோர் ஆடும் 'பிக்கினி ஷூட்' (biggini shoot)என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பாடல் ஒன்றின் மாஷப் வீடியோவான இதுவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே வேறு சில கிளாமர் புகைப்படங்களையும் டாப்ஸி வெளியிட்டுள்ளார்.

டாப்ஸியின் அழகு
இந்த போட்டோஸும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது. சிலர் ஜாலியான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். நடிகை நீனா குப்தா, டாப்ஸியின் அழகை புகழ்ந்துள்ளார். சிலர் சிம்பிள் உடைதான் அழகு. உங்களுக்கு அது அம்சமாக பொருந்துகிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











