ரொமான்ஸ் தொடங்கியாச்சாம்.. அடுத்த ஸ்போர்ட்ஸ் படம்.. தீவிர கிரிக்கெட் பயிற்சியில் டாப்ஸி!

By

சென்னை: சபாஷ் மித்து படத்துக்காக நடிகை டாப்ஸி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்களை உருவாக்குவது சினிமாவில் டிரெண்டாகி இருக்கிறது.

பல பயோபிக் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சச்சின் தெண்டுல்கர்

சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி வாழ்க்கையை 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரிலும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை 'சச்சின் பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரிலும் படமாக்கி வெளியிட்டனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையும் படமாக வந்தது.

பெண்கள் கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்

அடுத்து பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கை சினிமா படமாகிறது. மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். படத்தை ராகுல் தோலக்கியா இயக்குகிறார்.

வாழ்க்கை கதை

வாழ்க்கை கதை

இவர் ஏற்கனவே பர்ஸானா, மும்பை கட்டிங், லம்ஹா, ராயிஸ் ஆகிய இந்திப் படங்களை இயக்கியவர். இதில் நடிப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, இந்திய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் மிதாலி ராஜ் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்று கூறியிருந்தார்.

கிரிக்கெட் பயிற்சி

கிரிக்கெட் பயிற்சி

சபாஷ் மித்து என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை டாப்ஸி தற்போது கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ராஷ்மி ராக்கெட் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்து முடித்த டாப்ஸி, அடுத்த ஸ்போர்ட்ஸ் படத்துக்காக பயிற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தி படங்களில்

இந்தி படங்களில்

இதுபற்றி ட்விட்டரில் அவர் அறிவித்துள்ளார். கிரிக்கெட் பேட் மற்றும் பந்துடனான ரொமான்ஸ் தொடங்கிவிட்டது. நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆனாலும் பாதி வேலை முடிந்துவிட்டது. இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று கூறியுள்ளார். நடிகை டாப்ஸி தமிழில், வெற்றி மாறனின் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X