5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை!
சென்னை: கடந்த 12 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் மூலம், வெற்றிகரமான நடிகையாக டாப்ஸி இருக்கிறார்.
Recommended Video
தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி.
தெலுங்கிலும் நடித்து வந்த அவர், தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இந்தி சினிமாவுக்கும் சென்றார்.

ராஷ்மி ராக்கெட்
அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2 உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதையடுத்து அங்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ராஷ்மி ராக்கெட் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிகரமான
இவர் நடித்து கடந்த 12 மாதங்களில் வெளியான, பட்லா, கேம் ஓவர், மிஷன் மங்கள், சாண்ட் கி ஆங்க் மற்றும் கடந்த பிப்ரவரியில் ரிலீஸ் ஆன, தப்பட் ஆகிய ஐந்து படங்களும் மொத்தம் ரூ.352 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளன. இதையடுத்து வெற்றிகரமான இந்தி நடிகையாக டாப்ஸி இருக்கிறார் என்று ஜூம் டிவி தெரிவித்துள்ளது.

சிங்கப் பெண்ணே
இதுபற்றி நடிகை டாப்ஸி, இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இதில் பங்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் டாப்ஸியுடன், தப்பட் படத்தில் நடித்த தியா மிர்ஸா அவரை வாழ்த்தியுள்ளார். அதில், வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே. உங்களை நினைத்தும் நீங்கள் கதைகளைத் தேர்வு செய்வது நடிப்பது பற்றியும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தகுதியானவர்
இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தகுதியானவர்தான் என்றும் உங்கள் நடிப்பு படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிடுகிறது என்றும் உங்கள் ஒவ்வொரு படத்தையும் எதிர்பார்க்கிறேன் என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த லெவல்
இன்னொருவர், பாலிவுட்டில் நடிகைகளுக்கான இமேஜை மாற்றி இருப்பவர் டாப்ஸி. ரொமான்ஸ், காதல் என்று காட்டப்பட்டிருந்த நடிகைகளின் கேரக்டரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். நடிகர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறார். வாழ்த்துகள் டாப்ஸி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











