டாய்லெட்டில் டாப்ஸி.. அங்க உட்கார்ந்துகிட்டு அப்படி போஸ்.. வைரலாகும் லூப் லபேட்டா ஃபர்ஸ்ட் லுக்!

மும்பை: டாய்லெட்டில் அமர்ந்தபடி நடிகை டாப்ஸி கொடுத்துள்ள வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ் வைரலாகி வருகிறது.

லூப் லபேட்டா எனும் படத்திற்காக இப்படியொரு போஸை நடிகை டாப்ஸி கொடுத்துள்ளார்.

ஜெர்மன் மொழியில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டான ரன் லோலா ரன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் லோலா ரன்

ரன் லோலா ரன்

கடந்த 1998ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியான படம் ரன் லோலா ரன். தமிழில் வெளியான 12பி உள்ளிட்ட படங்களுக்கு இந்த படம் தான் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடங்களில் தனது காதலரை காப்பாற்ற 1 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க போராடும் காதலியின் கதை தான் ரன் லோலா ரன்

லூப் லபேட்டா

லூப் லபேட்டா

ரன் என்பதற்கு பதிலாக லூப் என்ற தொடர்ச்சி என்கிற வார்த்தையை பாலிவுட் இயக்குநர் ஆகாஷ் பாட்டியா பயன்படுத்தி லூப் லபேட்டா என டைட்டில் வைத்துள்ளார். ரன் லோலா ரன் படத்தின் வெறித்தனமான ரசிகரான இயக்குநர் அதன் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை வாங்கி இந்த படத்தை இன்று தொடங்கியுள்ளார்.

டாய்லெட்டில் டாப்ஸி

டாய்லெட்டில் டாப்ஸி

கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை டாப்ஸி இந்த படத்தில் நாயகியாக லீடு ரோலில் நடிக்கிறார். சவி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் டாப்ஸி, தனது புதிய படத்தின் ஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார். பாழடைந்து போன ஒரு டாய்லெட்டில் கால் மேல் கால் போட்டு டாப்ஸி அமர்ந்திருக்கும் வித்தியாசமான போட்டோ பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

ரகுல் கமெண்ட்

ரகுல் கமெண்ட்

நடிகை டாப்ஸியின் இந்த டாய்லெட் போஸ்டரை பார்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், "உஃப் மிர்ச்சி யு ஆர்" என ரொம்ப காரசாரமானவர் நீங்கள் என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் டாப்ஸியின் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் பிசி

பாலிவுட்டில் பிசி

ராஷ்மி ராக்கெட், சபாஷ் மித்து, ஹசீன் தில்ருபா, லூப் லபேட்டா என ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை டாப்ஸி. தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கண மண படத்திலும், விஜய்சேதுபதியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அடுத்தடுத்து அரை டஜன் படங்களை ரிலீஸ் செய்ய உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X