twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷ்மா சுவராஜாக நடிக்க ஆசைப்படும் டாப்சி போட்டி போடும் வித்யா பாலன்

    |

    சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்படவிருக்கிறது. அதில் சுஷ்மா சுவராஜாக நடிக்க ஆசைப்படுவதாக டாப்ஸி பன்னு தெரிவித்துள்ளார்.

    இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்த அடுத்த பெண் அமைச்சர் என்ற பெருமையை சுஷ்மா சுவராஜ் பெறுகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அளிக்கும் பதில்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகளால் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவர்.

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில் சுஷ்மா போட்டியிடவில்லை. பாஜக அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகும் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு ஓய்வில் இருந்தார். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு திடீர் மாரடைப்பால் காலமானார். இளம் வயதிலேயே புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காராக திகழ்ந்த அவரது மறைவு பாஜகவினரை மட்டுமல்லாது எதிர்கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    வாழ்க்கை வரலாறு சினிமா

    வாழ்க்கை வரலாறு சினிமா

    பயோபிக் படங்களை எடுப்பது சினிமாவில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், நடிகர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்களின் பயோபிக் படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பலரும் எடுத்து வருகின்றனர் கங்கனா ரணாவத், நித்யா மேனன் ஆகியோரும் ஜெயலலிதாவாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த சுஷ்மா சுவராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    சுஷ்மா சுவராஜ்

    சுஷ்மா சுவராஜ்

    சுஷ்மா சுவராஜ் பல பரிமாணங்களைக் கொண்டவர். 1973ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 25 வயதிலேயே ஹரியானா மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர். மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவர் ஏழுமுறை லோக்சபா உறுப்பினராக தேர்வானார். டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

    மனம் கவர்ந்த சுஷ்மா

    மனம் கவர்ந்த சுஷ்மா

    கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றிய போது வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் பலரின் மனங்களை கவர்ந்தவர். அவரது அரசியல் வாழ்க்கையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    சோனியாவிற்கு எதிர்ப்பு

    சோனியாவிற்கு எதிர்ப்பு

    கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து சோனியா காந்தி பிரதமராக பதவி ஏற்பதை சுஷ்மா சுவராஜ் கடுமையாக எதிர்த்தார். ஒரு வெளி நாட்டவர் பிரதமராக வருவதை தன்னால் ஏற்றக்கொள்ள முடியாது என்று கடுமையாக எதிர்த்தார். ஒருவேளை சோனியா காந்தி பிரதமராக பதவி ஏற்றால், வெள்ளை உடை உடுத்தி, மொட்டை அடித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் விதவையாகவே இருப்பேன் என்று அதிரடியாக பேசினார்.

    டாப்ஸி பன்னு

    டாப்ஸி பன்னு

    இவர் கடந்த 2015ஆம் ஆண்டில் நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி வரையிலும் பொறுப்பு பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அரசியல் பொதுவாழ்வில் பல சுவராஸ்யங்கள் நிறைந்த இவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கப்படவிருக்கிறது. அதில் சுஷ்மா சுவராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக டாப்சி பன்னு தெரிவித்துள்ளார்.

    தனுஷ் உடன் அறிமுகம்

    தனுஷ் உடன் அறிமுகம்

    டாப்சி பன்னு கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகியில் அறிமுகமானவர். ஆடுகளம் படத்தை தொடர்ந்து தமிழில் 2013ஆம் ஆண்டு காஞ்சனா 2 திரைப்படத்திலும், ஆரம்பம் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைக்காததால், இந்திப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தார்.

    பிங்க் நாயகி

    பிங்க் நாயகி

    இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த பிங்க் படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அந்தப் படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக இவர் முன்பு நடித்த படங்களை விட பிங்க் படத்தில் மிக மிக நன்றாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் மிஷன் மங்கள் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

    வித்யாபாலன்

    வித்யாபாலன்

    மிஷன் மங்கள் படத்தில் டாப்ஸி உடன் நடித்துள்ள நடிகை வித்யா பாலனும் தான் சுஷ்மா சுவராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் நடித்துள்ளார். படம் ஆரம்பிக்கும் முன்பே யார் நடிப்பது என்பதில் இரண்டு பிரபல நடிகைகளிடையே போட்டி எழுந்துள்ளது. அதிர்ஷ்டம் யார் பக்கம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

    English summary
    The biography of the late former Union Foreign Minister Sushma Swaraj is to be made into a film. Taapsee Pannu has said that she wants to play Sushma Swaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X