நெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு!

By

சென்னை: நெபோடிசம் காரணமாக தானும் சில படங்களை அநியாயமாக இழந்தேன் என்று தனுஷ் பட ஹீரோயின் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Tapsee Pannu Shocking! என்னையும் ஒதுக்கீடாங்க | Nepotism

தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர், இந்தி சினிமாவுக்கும் சென்றார்.

சபாஷ் மித்து

சபாஷ் மித்து

அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதனால் அங்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தப்பட் படமும் கவனிக்கப்பட்டது. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையான சபாஷ் மித்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ராஷ்மி ராக்கெட் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

வாரிசு நடிகர், நடிகைள்

வாரிசு நடிகர், நடிகைள்

பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பிறகு பாலிவுட்டில் நடக்கும் நெபோடிசம் பற்றிய பேச்சு பரவலாகி இருக்கிறது. வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அங்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. ரசிகர்கள் கடுமையாக இதுபற்றி விவாதித்து வந்தனர்.

சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹா

பிரபல வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தளப் பக்கங்களுக்குச் சரமாரியாக, கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால் சத்ருகன் சின்ஹாவின் மகள் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து விலகினர். இந்நிலையில், தென்னிந்திய படங்களில் நடித்துவிட்டு பாலிவுட் சினிமாவுக்கு சென்ற டாப்ஸியும் நெபோடிசத்தால் சில பட வாய்ப்புகளை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விரும்புகிறார்கள்

விரும்புகிறார்கள்

இதுபற்றி அவர் கூறும்போது, சினிமாவில் இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வரும்போது, தொடர்புகள் அதிகம் இருக்கும். அதனால் வாய்ப்புகள் பெறுவதில் சிக்கல் இருக்காது. வெளியில் இருந்து வந்தால், தொடர்புகளை உருவாக்குவதற்கும் ஆட்களை அறிந்து கொள்வதற்கும் நாட்கள் ஆகும். இயக்குனர்களும் யாரோ ஒருவரை நடிக்க வைப்பதற்கு பதில் தங்களுக்குத் தெரிந்தவர்களை நடிக்க வைக்கவே விரும்புகிறார்கள்.

வாய்ப்புகளை இழந்தேன்

வாய்ப்புகளை இழந்தேன்

இந்த நெபோடிசம் காரணமாக சில படங்களை இழந்திருக்கிறேன். இது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதனால் அப்படி நடந்தபோது வேதனை அடைந்தேன். இதற்கு ரசிகர்களையும் குறை சொல்வேன். நட்சத்திர குடும்பத்தில் இருந்து ஒருவர் அறிமுகமாகும்போது ஆர்வமாக செல்லும் அவர்கள், சினிமா குடும்பத்தில் இல்லாதவர்கள் நடித்தால், பார்க்க மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X