பாலிவுட் சென்றாலும் தமிழை மறக்காத டாப்ஸி.. இந்தியில் பேச சொன்னவருக்கு தமிழில் பேசாவா என பதிலடி!

Recommended Video

TAPSEE SHUT DOWN HINDI GUY | 50TH IFFI FESTIVAL | FILMIBEATTAMIL

சென்னை: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழில் ரசிகர்கர்களுக்கு நன்றி கூறி சர்வதேச திரைப்பட விழாவில் தமிழை ஓங்கி ஒலிக்க செய்தார்.

இந்நிலையில், அதே போன்ற ஒரு சம்பவத்தை இந்திய நடிகை டாப்ஸியும் நிகழ்த்தியுள்ளார். அவரது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி, தமிழில் பதிலடி கொடுத்தது தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பொன் விழா

பொன் விழா

IFFI எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது. நவம்பர் 20ம் தேதி அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த சினிமா திருவிழா, வரும் நவம்பர் 28ம் தேதி நிறைவடைகிறது.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து அசத்தி வந்த நடிகை டாப்ஸி, அமிதாப் பச்சனுடன் இணைந்து பிங்க் மற்றும் பாட்லா படங்களில் நடித்து பாலிவுட்டின் சிறந்த நடிகையாக முன்னேறியுள்ளார். டாப்ஸியின் வளர்ச்சி பாலிவுட்டில் கங்கனா ரனாவத் உள்ளிட்ட சில நடிகைகளுக்கு பெரும் பிரச்சனையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில்

தமிழில்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தேசிய விருது வென்ற ஆடுகளம் படத்தில் டாப்ஸி அறிமுகமானார். ஆடுகளத்தை தொடர்ந்து ஆரம்பம், வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா 2 படங்களில் டாப்ஸி நடித்துள்ளார்.

இந்திய நடிகை

இந்திய நடிகை

டாப்ஸி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் கலக்கி வரும் டாப்ஸி, தமிழில் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

என்ன பிரச்சனை

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாப்ஸி, பார்வையாளர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார். அப்போது, குறுக்கிட்ட நபர் ஒருவர், பாலிவுட் நடிகையான நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறினார். உடனடியாக பார்வையாளர்கள் பக்கம் திரும்பிய டாப்ஸி, உங்களுக்கு இந்தி புரியுமா எனக் கேட்க, பலரும் இல்லை என பதிலளித்தனர். தொடர்ந்து அந்த நபர் இந்தியில் பேசும்படி டாப்ஸியை வலியுறுத்தினார்.

தமிழில் பேசவா

அப்போது, சிரித்தபடி, சார், நான் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளேன், தமிழில் பேசவா எனக் கூற, அந்த நபர் வாயடைத்து போனார். இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமா கற்றுக்கொடுத்தது

தென்னிந்திய சினிமா கற்றுக்கொடுத்தது

மேலும், தென்னிந்திய சினிமா குறித்து நிகழ்ச்சியில் பேசிய நடிகை டாப்ஸி, கேமரா முன் எப்படி நிற்பது, நடிப்பது போன்ற அடிப்படை விசயங்களை தனக்கு தென்னிந்திய சினிமா தான் கற்றுக் கொடுத்தது எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X