இந்த பாப்பாவா, அந்த ஹீரோயின்..? நம்பவே முடியலையே.. வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை போட்டோ!
சென்னை: பிரபல நடிகை குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

லாக்டவுன்
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்தாலும் தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் அடுத்த மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளன. லாக்டவுனால் பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், டான்ஸ், சமையல் உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை டாப்ஸி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அழகா இருக்கீங்களே
குழந்தையாக இருக்கும்போது, அம்மாவுடன் எடுத்தப் புகைப்படம் அது. அதில் அவர் தங்கை ஷாகுனும் இருக்கிறார். இந்த போட்டோவை பலர் பாராட்டித் தள்ளி உள்ளனர். நீங்க உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க என்றும் அப்பவே அழகா இருக்கீங்களே என்றும் சிலர் கூறியுள்ளார். உங்க சிரிப்பு அப்ப இருந்த மாதிரியே இப்பவும் இருக்கிறது என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மித்தாலி ராஜ்
நடிகை டாப்ஸி, தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இதற்கிடையே இந்தி சினிமாவுக்கும் சென்றார். அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சமீபத்தில் தப்பாட் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் கதை உட்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











