நடிக்கவே தெரியாத தகுதியில்லாத நடிகையா? விமர்சித்த ரசிகருக்கு அட்டகாச ரிப்ளை கொடுத்த டாப்ஸி!

By

சென்னை: தன்னை, நடிக்கவே தெரியாத தகுதியில்லாத நடிகை என்ற நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார், டாப்ஸி.

ஆடுகளம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், டாப்ஸி பன்னு. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

மித்தாலி ராஜ் பயோபிக்

மித்தாலி ராஜ் பயோபிக்

அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதனால் அங்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தப்பட் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான சபாஷ் மித்து படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதி ஜோடி

விஜய் சேதுபதி ஜோடி

தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது இந்தியில் ராஷ்மி ராக்கெட் படத்தில் நடித்துவரும் டாப்ஸி, சமீபத்தில் தனது காதலர் மற்றும் சகோதரிகளுடன் மாலத்தீவுக்கு டூர் சென்றிருந்தார். அங்கிருந்து கிளாமர் புகைப்படங்களாக பதிவிட்டு வந்தார்.

ஹீரோவின் மனைவி

ஹீரோவின் மனைவி

சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் சினிமாவில் நடிக்க வந்தபோது சந்தித்த மோசமான அனுபவங்கள் பற்றி அவர் கூறியிருந்தார்.
ஹீரோவின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு படத்தில் இருந்து நீக்கினார்கள் என்று கூறியிருந்தார். இதுபரபரப்பானது.

தகுதியில்லாத நடிகை

தகுதியில்லாத நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸியை அடிக்கடி பலர் ட்ரோல் செய்வது உண்டு. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார் டாப்ஸி. இப்போது, நடிகை டாப்ஸியின் இன்ஸ்டா பக்கத்தில் நெட்டிசன் ஒருவர், தகுதியில்லாத நடிகை என்று டாப்ஸியை விமர்சித்து கமென்ட் பதிவு செய்திருந்தார்.

கிரீன் ஷாட் பதில்

கிரீன் ஷாட் பதில்

அதில், நடிக்கவே தெரியாத நடிகை என்றும் தகுதியில்லாதவர் என்றும் இந்தியில் கூறியுள்ளார். அதை கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள டாப்ஸி, அவருக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் . நான் என் தரத்தை உயர்த்தி இருக்கிறேன். அது உங்கள் கண்களுக்குத்தான் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

சரியான பதிலடி

சரியான பதிலடி

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் மாபியா, போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கணா, பாலிவுட் பிரபலங்கள் பலரை கடுமையாக விமர்சித்தார். இதற்கு நடிகை டாப்ஸி எதிர்கருத்து தெரிவித்ததால், ட்விட்டரில் அவரையும் விளாசினார் கங்கனா. இதனால் கங்கனா ரசிகர்கள் டாப்ஸியை விமர்சித்து வருகின்னர். அவர்களுக்கு இவரும் சரியான பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X