சில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம்? அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி!
மும்பை: தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னும் சில விஷயங்களை நான் அடைய வேண்டி இருக்கிறது என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தமிழில், ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர், இந்தியில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.

சபாஷ் மித்து
அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. கடைசியாக அவர் நடித்து வெளியான தப்பட் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான சபாஷ் மித்து படத்தில் நடிக்க இருக்கிறார்.

ராஷ்மி ராக்கெட்
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக, அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதை, இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இப்போது இந்தியில் ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். விளையாட்டு வீராங்கனை பற்றிய கதையான இதை ஆகர்ஷ் குரானா இயக்கி வருகிறார்.

பேட்மின்டன் வீரர்
இதையடுத்து, ஹசீன் தில்ரூபா, ஜன கண மன உட்பட சில படங்களில் நடித்து வரும் டாப்ஸி, வெளிநாட்டு பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார். இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருந்த அவர், கொரோனா லாக்டவுன் நேரத்தில் அதை வெளிப்படுத்தினார்.

காதலை ஏற்றனர்
தனது குடும்பத்தினரும் அவர் காதலை ஏற்றுக் கொண்டதாகக் கூறியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை டாப்ஸியுடன் அவர் காதலர் மத்தியாஸும் மாலத்தீவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின. இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணம் பற்றி கேட்கப்பட்டது.

அர்ப்பணிக்க நேரம்
அப்போது அவர், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னும் சில விஷயங்களை அடைய வேண்டும் என நினைக்கிறேன். அடைந்தால், வருடத்துக்கு ஐந்து, ஆறு படங்களில் நடிப்பதற்கு பதிலாக, இரண்டு மூன்று படங்கள் என குறைத்துக் கொள்வேன். அப்போதுதான் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிக்க நேரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











