சானியா மிர்சா பயோபிக்..தனுஷ் பட நடிகை நடிக்கிறாரா?
சென்னை : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் பட நாளை டாப்ஸி பன்னுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்த சானியா, சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

பயோபிக்
விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை குறித்து திரைப்படம் எடுப்பது வழக்கமான உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிகெட் வீரர் சச்சின் ,தோணி ஆகியோரது வாழ்க்கை வரலாறு வெளியாகி வசூலில் சாதனை படைத்தன.

கபில்தேவ் வரலாறு
இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு 83 என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இந்திய அணி 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் 83 படத்தினை கபீர் கான் இயக்கி வருகிறார். இது கபில்தேவின் உண்மைக் கதையாகும்.

வாழ்க்கை வரலாறு
அதேபோல மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் 1இடம் என பல சாதனைகளை சானியா மிர்சா நிகழ்த்தியுள்ளா. இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்பட உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பேச்சுவார்த்தைகள்
ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும் இப்படத்தில் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான டாப்ஸி பன்னுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











