ஆணின் 'அந்த' இடத்தில் கை வைத்த டாப்சி.. 'நோ என்றால் எல்லோருக்கும் நோ தான்'.. விளாசிய நெட்டிசன்கள்!
சென்னை: மிஷன் மங்கள் படத்தின் டிரெய்லர் நடிகை டாப்சியை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
இந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் மிஷன் மங்கள். வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சின தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

டாப்சியின் தவறு
இதில் ஒரு காட்சியில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் டாப்சி, தவறுதளாக அருகில் அமர்ந்திருக்கு ஆணை தகாத இடத்தில் பிடித்துவிடுகிறார். காமெடிக்காக வைக்கப்பட்ட இந்த காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் காட்சி
இந்த காட்சியை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த டிரெய்லர் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த காட்சியில் நடித்தற்காக நடிகை டாப்சியை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
கடுமையான விமர்சனம்
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர்சிங்கில், ஹீரோ ஹீரோயினை தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றது. இதனை டாப்சி கடுமையாக விமர்சித்திருந்தார். அதை குறிப்பிட்டு தற்போது டாப்சியை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பாலியல் பலாத்காரம்
"ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரது தனிப்பட்ட உறுப்புகளை தொடக்கூடாது. இது ஒரு பெண் ஆணை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு சமம். நோ என்றால் நோ என்பது அனைவருக்கும் பொதுவானது. தயது செய்து இந்த காட்சியை நீக்கிவிடுங்கள்", ஒருவர் கேட்டுள்ளார்.

சும்மா இருந்திருப்பார்களா?
'இதுவே ஒரு ஆண் இப்படி பெண்ணிடம் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா பெண்ணியவாதிகள். எத்தனை போராட்டங்கள் வெடித்திருக்கும்' எனும் கமெண்ட்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











