twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது அங்க.. இந்த வருடம் சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை.. அடுத்த வருஷம்தானாம்!

    கொச

    By
    |

    கொச்சி: தியேட்டர்களை அடுத்த வருடம் திறக்க கேரள தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.

    அதைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் உட்பட சினிமா துறையினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

    திறக்க அனுமதி

    திறக்க அனுமதி

    இதையடுத்து தியேட்டர்களை திறக்க மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது. அதன்படி சில மாநிலங்கள் தியேட்டர்களை திறந்துள்ளன. சில மாநிலங்கள் திறக்கவில்லை. தமிழக அரசு, 10 ஆம் தேதி முதல் 50 இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

    விபிஎப் பிரச்னை

    விபிஎப் பிரச்னை

    இதையடுத்து 8 மாதத்துக்குப் பிறகு தமிழத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் வராததால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தீபாவளிக்கு சில பகுதிகளில் தியேட்டர்கள் முழுமையாக நிரம்பியதாகக் கூறப்பட்டது.

    ரசிகர்கள் வரவில்லை

    ரசிகர்கள் வரவில்லை

    ஆனால், தொடர்ந்து பல தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவில்லை. இருக்கைகள் முழுமையாகவும் நிரம்பாத சூழல் நிலவுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என தியேட்டர்கள் அதிபர்கள் யோசித்து வருகின்றனர். இதற்கிடையே, கேரள தியேட்டர் அதிபர்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    திறக்க வாய்ப்பில்லை

    திறக்க வாய்ப்பில்லை

    கேரள தியேட்டர் அதிபர்கள் சிலர் கூறும்போது, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தில் தியேட்டர்களை திறந்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் வராததால், அங்கு பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், இங்கும் இந்த வருடம் தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்றனர்.

    விசு பண்டிகை

    விசு பண்டிகை

    வரும் 19 ஆம் தேதி இதுபற்றி கேரள முதலமைச்சரிடம் தியேட்டர் அதிபர்கள் ஆன்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அடுத்த மாதம் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தாலும் இந்த முடிவை அவரிடம் தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விசு பண்டிகைக்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என தெரிகிறது.

    English summary
    Kerala theater owners are of the opinion that theaters should be opened for Vishu next year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X