'பாதுகாப்பில்லைன்னு நினைக்கிறவங்க இப்படிதான் பொறாமைப்படுவாங்க..' பிரபல நடிகையை விளாசிய டாப்ஸி!
மும்பை: பாதுகாப்பில்லை என்று நினைப்பவர்கள்தான் பொறாமைபடுவார்கள் என நடிகை கங்கனாவுக்கு டாப்ஸி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர், இந்தி நடிகை கங்கனா ரனாவத்.
இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார்.

சரியான பதிலடி
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்களை நடிகை கங்கனா விமர்சித்து வந்தார். நெபோடிசம் தொடர்பான விஷயத்தில், கடுமையான கருத்துகளை கூறிய கங்கனா, நடிகை டாப்ஸியை அவ்வப்போது கிண்டலடித்து ட்வீட் செய்வார். அதற்கு அவரும் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.

பி கிரேடு நடிகை
ஏற்கனவே பி கிரேடு நடிகை என்பது உட்பட பலவித சர்ச்சை புகாரை நடிகை கங்கனா, டாப்ஸி மீது வைத்தார். அதற்கு டாப்ஸியும் விடுவதாயில்லை அவருக்கு பதில் கொடுத்து வருகிறார். சமீபகாலமாக இவர்கள், மோதலில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

ஆயிரம் முறை
நடிகை டாப்ஸி, சில வருடங்களுக்கு முன், இதழ் ஒன்றின் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அது அப்படியே கங்கனாவை காப்பியடித்து இருப்பதாக ரசிகர் ஒருவர் கூறியிருந்தார். இன்னொருவர், ஆயிரமாவது முறையாக கங்கனாவை, நடிகை டாப்ஸி காப்பியடிக்கிறார் என்று கூறியிருந்தார்.

உண்மை ரசிகை
இதற்கு பதிலளித்த நடிகை கங்கனா ரனாவத், டாப்ஸியின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் ஓர் உண்மையான ரசிகை. அதனால்தான், என்னை கவனிக்கவும் என்னைப் போலவே செய்வதற்கும் தனது முழு இருப்பையும் அர்ப்பணித்து இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பின்மை அறிகுறி
இதையடுத்து இதற்கு பதிலளித்துள்ள நடிகை டாப்ஸி, பிரபல அமெரிக்க அறிவியல் புனைகதையாளர் ராபர்ட் ஏ. ஐன்லைனின் (Robert A. Heinlein) மேற்கோளை குறிப்பிட்டுள்ளார். அதில், 'திறமையான, தன்னம்பிக்கைக் கொண்ட ஒருவர், எதற்கும் பொறாமைப்படத் தேவையில்லை. பொறாமை என்பது நரம்பியல் பாதுகாப்பின்மைகான அறிகுறி எனக் கூறியுள்ளார்.

ஆவேச ட்வீட்
ஆனால், இதில் கங்கனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவருக்கான பதில்தான் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். இதற்கு #ThoughtOfTheDay என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார் நடிகை டாப்ஸி. இதையடுத்து இவர்கள் மோதலில் இன்னும் பல ஆவேச ட்வீட்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications