Zakir Hussain: ஜாகிர் உசேன் தபேலா இவர்தானா.. உலகப் புகழ் ஜாகிர் உசேன் மறைவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சான் ஃபிரான்சிஸ்கோ: உலகப் புகழ் பெற்ற தபேலா மாஸ்ட்ரோவான, ஜாகீர்உசேன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இருதய கோளாறு காரணமாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள, மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதாவது, டிசம்பர் 15ஆம் தேதி, உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், திவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு உடிய சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல், உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவர் மறைவு குறித்து, அவரது நண்பரும், புல்லாங்குழல் கலைஞருமான, ராகேஷ் சௌராஷியா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜாகீர் உசேன் குடும்பமாகவே தபேலாவில் தலைசிறந்தவர்களாக இருந்துள்ளனர். இவரது தந்தை, அல்லா ரக்கா, தபேலா ஜாம்பவானாக திகழ்ந்தார். இவர் கடந்த 1951ஆம் ஆண்டு மார் 9ஆம் தேதி மும்பையில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே தபேலாவில் அதிக ஆர்வம் காட்டிய, ஜாகிர் உசைன், அவரது 12வது வயதில் கச்சேரிகளில் தபேலா வாசிக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

இவரது திறமை கச்சேரிகளில் மட்டும் நின்றுவிடாமால் மேலும் மேலும் வளர்ந்தது என்றுதான் கூறவேண்டும். உலகப்புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான தி பீட்டில்ஸுடன் இணைந்து இசைக் கச்சேரிகளில் வாசித்துள்ளார். அதேபோல், இந்தியா மட்டும் இல்லாமல், பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் அரங்கேற்றம் செய்துள்ளார்.
விருதுகள்: இவர் கிராமி விருதினையும் வென்றுள்ளார். அதேநேரத்தில் இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவு இந்திய நாட்டிற்கும், தபேலா இசைக் கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், அவரது ரசிகர்களுக்கு பெரிய இழப்பாக கருதப்படுகின்றது. உலகப் புகழ் பெற்ற இவர் குறித்து, ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றிய இந்தியன் படத்தில் இடம்பெற்ற, பாடலான டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா பாடலில், 'ஜாகிர் உசேன் தபேலா இவள்தானா' என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜாகீர் உசேன் மறைந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாகீர் உசேன் உடல் இந்தியா கொண்டுவரப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.
மரண வதந்தி: ஜாகிர் உசேன் மறைந்துவிட்டார் என நேற்று இரவு வதந்தி பரவிய நிலையில், பல ஊடகங்கள் மரண செய்தியை பதிவிட்ட நிலையில், ஜாகிர் உசேன் உறவினர் ஒருவர், அவர் இன்னமும் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள், தேவையில்லாமல் மரண வதந்தியை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











