தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் உயிரிழந்தார்… உறுதி செய்த குடும்பம்!
சென்னை: உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. அவர் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

உஸ்தாத் ஜாகிர் உசேன் 1951 ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை இசைக் கலைஞர் அல்லா ராக்கா, ஜாகிர் உசேனுக்கு 3 வயது முதலே தபேலா கற்பித்து மேதையாக்கினார். இதைத்தொடர்ந்து, செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், என் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், உனக்கென்று தனியான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
பல விருதுகள்: கிராமி விருது, பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, பாராம்பரிய இசைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு ஃபெலோஷிப் பெற்றவர். 2023 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
உறுதி செய்த குடும்பம்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன், நுரையீரல் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் நேற்று இரவு முதல் தகவல் வெளியான நிலையில், இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தி செய்துள்ளனர். அந்த அறிக்கையில், ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினையின் காரணமான சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நிலையில் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











