பிரஷாந்த் நடிக்கும் 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்.. முக்கிய கேரக்டரில் அந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராம்!

By

சென்னை: இந்தியில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தமிழ் படத்தில் நடிகை தபு நடிக்க இருக்கிறார்.

அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், அந்தாதுன். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்குப் போட்டி நிலவியது.

தியாகராஜன்

தியாகராஜன்

தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் தனுஷ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கினார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பார் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து தியாகராஜன் கூறும்போது, இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற சில நிறுவனங்களும் சில ஹீரோக்களும் போட்டிப் போட்டார்கள். கடைசியில் நான் வாங்கினேன்.

ஜானி கட்டார்

ஜானி கட்டார்

இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் 'ஜானி கட்டார்' திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்தேன்' என்று தெரிவித்திருந்தார். அந்தாதுன் படத்தின் கதை, பியானோ மாஸ்டரை பற்றியது. நடிகர் பிரஷாந்த், லண்டன் டிரினிடி கல்லூரியில் பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்றும் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

ரீமேக்

ரீமேக்

இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இந்தப் படத்தையும் ரீமேக் செய்கிறார். படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார் பிரஷாந்த். இந்தப் படத்தின் ஒரிஜினலில் தபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கேரக்டரில் வேறு நடிகை நடிக்க முதலில் இருப்பதாகக் கூறப்பட்டது.

காதலர் தினம்

காதலர் தினம்

இப்போது தபுவே தமிழிலும் நடிப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தியாகராஜன் கூறும்போது, அவரிடம் பேசிவருகிறோம். லாக்டவுன் முடிந்ததும் இறுதியாகிவிடும்' என்றார். தபு, ஏற்கனவே தமிழில், காதலர் தினம், மணிரத்னம் இயக்கிய இருவர், அர்ஜுன் இயக்கி நடித்த தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X