துக்ளக் தர்பார் போஸ்டர் சூர்யா படத்தின் காப்பியா.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: விஜய் சேதுபதி அரசியல்வாதியாக களமிறங்கி உள்ள துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Recommended Video

மனிதன் Vijay Sethupathi Photo shoot Making • வீடே ஒரு சிறை

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தின் வசீகரிக்கும் போஸ்டரும், அரசியல்வாதி கெட்டப்பில் வரும் காட்சிகளின் ஒரு சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் எதிர்பார்ப்பை கூட்டி இருந்த நிலையில், தற்பொழுது துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர் சூர்யா படத்தின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

புதுமுக இயக்குனர்

புதுமுக இயக்குனர்

புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கிவரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று அதன் போஸ்டர்களும், விஜய்சேதுபதி அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளது.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

நடிக்கத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் விஜய்சேதுபதி தற்பொழுது டெல்லி பிரசாத் தீனதயாளன் என்ற அறிமுக இயக்குனர் அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 ஒரே மாதிரி டிசைனில்

ஒரே மாதிரி டிசைனில்

மேலும் இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது அது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், சூர்யா கூட்டணியில் உருவான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் போஸ்டரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் போஸ்டரும் ஒரே மாதிரி டிசைனில் இருக்கின்றது.

தானா சேர்ந்த கூட்டம் போஸ்டரை

தானா சேர்ந்த கூட்டம் போஸ்டரை

எனவே துக்ளக் தர்பார் படக்குழு சுயமாக எதையும் சிந்திக்காமல் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரை அப்பட்டமாக காப்பியடித்து வெளியிட்டுள்ளனர் என இணையதள வாசிகள் இந்த இரண்டு படங்களின் போஸ்டர்களையும் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

அப்படியே காப்பி அடிக்கப்பட்டது

அப்படியே காப்பி அடிக்கப்பட்டது

ஏற்கனவே விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் போஸ்டர் இதே தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரில் இருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டது என கலாய்த்து வந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போஸ்டரும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளதை அறிந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் உறைந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X