கண்டுகொள்ளாத கோலிவுட்.. ரெட் கார்ப்பெட் விரித்த பாலிவுட்.. அமலா பாலுக்கு இனிமே அமோகம் தான்!
Recommended Video
மும்பை: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் புதிய வெப் சீரிஸில் லீடு ரோலில் அமலா பால் நடிக்கவுள்ளார்.
1970-களில் பாலிவுட்டை கலக்கிய பிரபல ஹீரோயின் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது, மகேஷ் பட் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்ட அமலா பால், ஷூட்டிங் தொடங்கியது என தெரிவித்துள்ளார்.

ஆடையின்றி
மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆடை திரைப்படம், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஒட்டுத் துணி இல்லாமல் அமலா பால் செம்ம போல்டாக அந்த படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றார்.

மார்க்கெட் காலி
அமலா பாலின் போல்டு அவதாரை பார்த்து மிரண்ட பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகம் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை குவித்தது. ஆனால், கோலிவுட் திரையுலகமோ, ஆடையின்றி நடித்த அமலா பாலை கண்டு கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இருந்து அமலா பால் தூக்கப்பட்டார்.

மறுக்கப்பட்ட விருதுகள்
மேலும், 2019ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது அமலா பாலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் நாட்டில் நடந்த பல விருது விழாக்களில் அமலா பாலை வேண்டுமென்றே ஓரங்கட்டப் பட்டு மற்ற கமர்ஷியல் பட நடிகைகளுக்கு சிறந்த நடிகை விருதை வழங்கினர்.

ரிலீஸ் ஆகவில்லை
மேலும், ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல திரைப்படம் கடந்த டிசம்பர் 27ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அதோ அந்த பறவை படம் ரிலீசாக முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

பாலிவுட் வாய்ப்பு
கோலிவுட்டில் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றாலும், அது பற்றி கவலைப் படாத அமலா பாலுக்கு தற்போது பாலிவுட்டில் மகேஷ் பட் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1970-களில் அமிதாப் பச்சன் மற்றும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பர்வீன் பாபி கதையில் அமலா பால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
படக்குழுவுடன் அமலா பால்
இந்நிலையில், தற்போது படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன், தாஹிர் ராஜ் பஸின், அம்ரிதா பூரி உள்ளிட்டோர் இந்த வெப் சீரிஸில் நடிக்கவுள்ளனர். சர்ச்சைகளுக்கு பெயர் போன பர்வீன் பாபி வெப் சீரிஸ் பாலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











